Showing posts with label படங்கள். Show all posts
Showing posts with label படங்கள். Show all posts

Thursday, September 27, 2012

சிங்கார சென்னையை சுற்றி பார்க்கலாம் வாங்க-1

உலகின் ,  இந்தியாவின் ,   தென்இந்தியாவின்   உயரமான கட்டிடம் பற்றி பார்த்துவிட்டோம்

அடுத்து நமது சென்னை மாநகரின் உயரமான கட்டிடங்கள் பற்றி பார்ப்போமா

                   சென்னையின் தட்பவெப்ப நிலை மற்றும் மண்ணின் தன்மையை கருத்தில் கொண்டு அதிஉயரமான கட்டிடங்கள் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. 1998 வரை 40 மீட்டர் உயரம் வரை மட்டுமே கட்டிடங்கள் கட்ட அனுமதிவழங்கப்பட்டது. பின்பு தற்போது இது 60 மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் Hiranandani Upscale towers க்கு 134 மீட்டர் உயரம் வரை கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது, மேலும் Orchid View 2 (DLF Gardencity), Garnet (Olympia Opaline) போன்ற சில கட்டிடங்களுக்கும் விலக்களிக்கப்பட்டுள்ளது.

            LIC building in google maps
         சென்னை நகரின் பழமையான கட்டிடமான LIC கட்டிடம் 1953 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1959 இல் முடிக்கப்பட்டது. அண்ணா சாலையில்(mount road) கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் 177 அடி உயரம் கொண்ட இக்கட்டிடம் தான் இந்தியாவின் உயரமான கட்டிடமாக இருந்தது 1961 வரை. LIC காண தென்இந்தியாவின் தலைமையகமாக செயல்படுகிறது 
      சமீபத்தில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக சுரங்கம் தோண்டும் போது ஏற்பட்ட அதிர்வில் LIC கட்டிடத்தின் 11 வது மாடியில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


          இது தான் சென்னை மாநகரின் உயரமான கட்டிடம், மொத்தம் 7 கட்டிடங்களை கொண்டது.
i.Brentwood
        
ii.pinewood
        
iii.brinchwood
          
iv.greenwood
          
v.seawood
          
vi.beachwood
        
vii.oceanic
        



மேலும் சில உயரமான கட்டிடங்கள்


    tidel park

                                                               saravana stores

                                                               narayana ocean tower


                                                                  erdc building

                                                                      city center

                                                               bellica towers

                                                                   ennore port

                                                                         cts

                                                           adayar, besant nagar bridge



                                                             sky view of chennai

                                                            skyview of marina









(தொடரும்)
இன்னும் சென்னையின் சில முக்கியமான இடங்களுடன் அடுத்த பதிவில் 
சிந்திப்போம் 


இன்று இணைய உலகின் ராஜாவான google தேடுபொறிக்கு 14 வது பிறந்தநாள். இணைய உலகில் ஒரு மாபெரும் புரட்சியே google வந்த பிறகு உருவானது என்றால் அது மிகையாகாது...
happy birthday google...



கருத்துக்களை கமெண்ட் பாக்ஸ் இல் இட்டு செல்லுங்கள் 

நன்றி!!!
ம.ஞானகுரு

Friday, September 7, 2012

உலகின் மிக உயரமான கட்டிடம்


உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெற்ற கட்டிடம் துபாயில் உள்ளது. Burj Khalifa என்று அழைக்கப்படும் இதன் உயரம் 2,717 அடி (828 மீட்டர்) மேலும் 163 மாடிகளை கொண்டது. செப்டம்பர் 2004 இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு அக்டோபர் 2009 இல் முடிக்கப்பட்டது. 4 ஜனவரி 2010 பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது

 $20 பில்லியன் டாலர் (20000000000 US dollars = 1118900000000.0000 Indian rupees) செலவில் கட்டப்பட்டது. 30,௦௦௦ அறைகள், 9 அதி நவீன ஹோட்டல், 7.4 acre பரப்பளவில் பூங்கா, 30 acre பரப்பளவில் செயற்கை ஏரி இக்கட்டிடத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது





Samsung Engineering & Construction இக்கட்டிடத்தை கட்டியது. petronas twin towers , taipei 101 போன்ற உயரமான கட்டிடங்களும் இந்நிறுவனத்தால் கட்டப்பட்டதே...

 330,000 m3 (431,600 cu yd) concrete மற்றும் 55,000 tonnes (61,000 short tons; 54,000 long tons) steel rebar இதை கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது.

  150 மாடிகள் வரை லேசான திடமான concrete ஆளும் அதற்கு மேலே இருக்கும் 12 மாடிகள் இரும்பு கம்பிகளை கொண்டும் கட்டப்பட்டுள்ளது.
  28 March 2011 Alain Robert என்பவர் 6 மணி நேரத்தில் ஏறி (வெளிப்புறமாக) சாதனை படைத்துள்ளார்

உலகின் சில உயரமான கட்டிடங்கள்:

1. BURJ KHALIFA
         நாடு: UAE
        உயரம்: 828 m
        மாடிகள்: 163
                      google maps இல் பார்க்க

2. ABRAJ AL BAIT TOWERS
        நாடு: saudi arabia
       உயரம்: 601 m
       மாடிகள்: 120


3. INTERNATIONAL COMMERCE CENTER
      நாடு: hong kong
     உயரம்: 484 m
     மாடிகள்: 118

4. WILLS TOWERS
      நாடு: united states
      உயரம்: 442 m
     மாடிகள்: 108


நேரமின்மையால் தெளிவான விளக்கம் தர இயலவில்லை  மற்ற மூன்று கட்டிடங்களுக்கான google maps லிங்க் விரைவில் இடுகிறேன்

நன்றி
ம.ஞானகுரு

Thursday, August 30, 2012

இந்தியாவின் மிக உயரமான கட்டிடம்



                 இந்தியாவின் மிக உயரமான  கட்டிடம் என்ற பெருமையை பெற போகும் கட்டிடம் SOUTH CENTRAL MUMBAI இல் கட்டப்பட்டு வருகிறது WORLD ONE என பெயரிடப்பட்டுள்ள இந்த அபார்ட்மென்ட் 2014 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்படும்.
          REALITY MAJOR LODHA DEVELOPMENT என்ற நிறுவனம் 2,000 கோடி($ 424.67 million) மதிப்பீட்டில் 17 acre நிலப்பரப்பளவில் காட்டிவருகிறது 
          117 மாடிகள் கொண்ட இக்கட்டிடம் 1450 அடி or 450 மீட்டர் உயரம்(கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர்) கொண்டது.
          இந்த கட்டிடத்தில் மொத்தம் 300 அபார்ட்மென்ட் 3 or 4 பெட்ரூம்கள், நீச்சல்குளம் மற்றும் சகல வசதிகள் கொண்டதாக கட்டபடுகிறது. மேலும் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்க மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து உலக தரம் வாய்ந்த விலையுயர்ந்த marbles மற்றும் அலங்கார பொருட்கள் கொண்டுவரப்பட்டு சமையல் அறை, பெட்ரூம், பாத்ரூம் மற்றும் வரவேற்ப்பு அறைகள் அலங்கரிக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே அபார்ட்மென்ட் வாங்க பூகிங் தொடங்கிவிட்டது. ஒரு அபார்ட்மென்ட் இன் விலை எவ்வளவு தெரியுமா 7.5 கோடியிலிருந்து 50 கோடி வரை வசதிகளுக்கேற்ப உள்ளது. 
   உலகில் சிறந்த கட்டிட பொறியாளர்கள் கொண்டு தீ விபத்து தடுப்பது, இயற்க்கை சீற்றங்களில் இருந்து பாதிப்படையாமல் இருப்பது போன்ற அணைத்து காரணிகளையும் ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் கட்டப்பட்டு வருகிறது


  250,000 cubic metres சிமெண்ட்-கான்க்ரீட், 35,000 metric tonnes இரும்பு கம்பிகள், 40,000 square metres கண்ணாடி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது, மேலும் 18 high-speed lifts, ஒவ்வொரு lift உம் வினாடிக்கு 3 மாடி பயணம் செய்யும் வேகம் கொண்டது.



இந்தியாவில் உயர்ந்த கட்டிடங்கள் சில:

1. IMPERIAL TOWER 1& 2(mumbai)
          இது தான் இந்தியாவின் தற்போதைய உயர்ந்த கட்டிடம் 833 அடி(254 metres) உயரம் கொண்ட இது மொத்தம் 60 மாடிகளை கொண்டது.
imperial towers google map இல் காண

2. LODHA BELLISSIMO A & B & C
         இந்தியாவின் இரண்டாவது உயரமான கட்டிடமான இது 728 அடி(222 metres) உயரம் கொண்டது மொத்தம் 53 மாடிகளை கொண்டது.

3. VIVAREA 1 & 2 & 3
        656 அடி(200 metres) உயரம் கொண்ட இது மொத்தம் 45 மாடிகளை கொண்டது.

4. ASHOK TOWERS D(mumbai)
         193 அடி உயரம் கொண்ட இது மொத்தம் 49 மாடிகளை கொண்டது.
ashok towers google map இல் காண

11. ANTILIA(mumbai)
         முகேஷ் அம்பானியின் வீடான இது தான் உலகின் மிக பெரிய வீடு என்ற பெருமை கொண்டது 563 அடி(173 metres) உயரம் கொண்ட இது மொத்தம் 27 மாடிகளை கொண்டது. இங்கு மொத்தம் 600 வேலையாட்கள் வேலை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

antilia home google map இல் பார்க்க

இந்தியாவின் உயரமான முதல் 100 கட்டிடங்களில் கூட நமது சென்னையின் ஒரு கட்டிடமும் இடம் பெறவில்லை.


அடுத்த பதிவு உலகின் மிக உயரமான கட்டிடம்

மறக்காமல் கருத்துக்களை comment boxil இட்டு செல்லுங்கள்...

நன்றி!!!
ம.ஞானகுரு