உபநிடதங்கள்
வேத காலத்திற்கு பிறகு உபநிடதங்கள் தோன்றின. இவை வேதங்களின் கிளை நூல்கள் எனவும் கூறப்படுகிறது. உபநிடதங்கள் பண்டைய இந்தியாவின் தத்துவ நூல்கள் மேலும் இவை இந்துக்களின் ஆதார நூலாகவும் விளங்குகிறது. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இவ்விலக்கியத்தில் நான்கு வேதங்களுக்கும் சாகைகள் என்று பெயருள்ள பல கிளைகள் உள்ளன. எல்லா கிளை நூல்களும் தற்காலத்தில் காணப்படவில்லை. ஒவ்வொரு வேதத்தின் முடிவிலும் முடிவிலும் உபநிடதங்கள் இருந்திருக்கவேண்டும் என்று நம்பப்படுகிறது. பல உபநிடதங்கள் இன்று இல்லாமல் போனாலும் நூற்றுக்கும் மேற்ப்பட்டவை கிடைத்துள்ளன. வேதங்களிலுள்ள சடங்குகளைப்பற்றிய விபரங்களும், தெய்வத்திற்கும் அசுரர்களுக்கும் இடையே உள்ள பரிமாறல்களும் இன்றைய விஞ்ஞான உலகத்திற்கு ஏற்புடையதாக உள்ளதா இல்லையா என்ற ஐயங்களை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு வேதப்பொருளின் ஆழத்தை அறிய முயலும் யாரும், உபநிடதங்களிலுள்ள தத்துவங்களினால் கவரப்படாமல் இருக்கமுடியாது.
உபநிடதங்களில் சில உரைநடையிலும் சில செய்யுள்நடையிலும் உள்ளன. ஆனால் எல்லாமே ஆன்மிக அனுபவங்களையும், வாழ்க்கையின் அடிப்படைப் பிரச்சினைகளையும் அலசுபவை. வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? பிறப்பும் இறப்பும் ஏன், எப்படி நிகழ்கின்றன? அடிப்படை உண்மை யாது? அழிவில்லாத மெய்ப்பொருள் ஒன்று உண்டானால் அதன் சுபாவம் என்ன? அதுதான் கடவுளா? இவ்வுலகம் எப்படித் தோன்றியது? ஏன் தோன்றியது? மறுபிறப்பின் தத்துவம் என்ன? நன்மையும் தீமையும் மனிதனைப் பொருத்ததா, அல்லது அவைகளுக்கென்று தனித்துவம் உண்டா? அறிவு என்பதும் மனதின் பல ஓட்டங்களைப்போல் ஒன்றுதானா அல்லது அறிவு நன்மை தீமைகளைத் தாண்டிய ஒரு அடிப்படை உண்மையா? இவைகளையும் இன்னும் பல கேளிவிகளையும் அலசி பார்த்து ஒரு உன்னதமான முடிவை கூறியுள்ள நூல்கள் தான் உபநிடதங்கள்.
மொத்தம் 108 உபநிஷத்துக்கள் இருப்பதாக முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்குச் சொல்கிறார்.அவற்றில் பத்து மிக முக்கியமானவை என்பது வழக்கு. மிகப் பழமையானவையும் கூட. ஆதிசங்கரர், இராமானுஜர், உடுப்பி மத்வர், நீலகண்ட சிவாசாரியார் ஆகிய நான்கு சமயாசாரியர்களும் முறையே அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், சித்தாந்தம் என்னும் கொள்கைகளையொட்டி மேற்கூறிய பத்து முக்கிய உபநிஷத்துக்களுக்கும் விரிவுரை எழுதியுள்ளனர். பதினெட்டாம் நூற்றாண்டில் உபநிஷத்பிரம்மேந்திரர் என்னும் துறவி 108 உபநிஷத்துக்களுக்கும் உரை எழுதியுள்ளார்.
108 உபநிடதங்களும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்படுகின்றன:
10 முக்கிய உபநிடதங்கள்:
ஈசா வாச்ய உபநிடதம் (சுக்ல யசூர்வேதம்)
கேன உபநிடதம் (சாம வேதம் - தலவகார சாகை)
கடோபநிடதம் (கிருஷ்ணயஜுர் வேதம் - தைத்திரீய சாகை)
பிரச்ன உபநிடதம் (அதர்வண வேதம்)
முண்டக உபநிடதம் (அதர்வண வேதம்)
மாண்டூக்ய உபநிடதம் (அதர்வண வேதம்)
ஐதரேய உபநிடதம் (ரிக் வேதம் - ஐதரேய சாகை)
தைத்திரீய உபநிடதம் (கிருஷ்ணயஜுர் வேதம்)
பிரகதாரண்யக உபநிடதம் (சுக்லயஜுர் வேதம்)
24 சாமானிய வேதாந்த உபநிடதங்கள்
20 யோக உபநிடதங்கள்
17 சன்னியாச உபநிடதங்கள்
14 வைணவ உபநிடதங்கள்
14 சைவ உபநிடதங்கள்
9 சாக்த உபநிடதங்கள்
இவைகளில்,
10 ரிக்வேதத்தைச் சார்ந்தவை
32 கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை
19 சுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை
16 சாம வேதத்தைச் சார்ந்தவை
31 அதர்வணவேதத்தைச்சார்ந்தவை.
உபநிடதங்களை தொடர்ந்து தோன்றியவை இதிகாசங்கள் எனப்படும் புராணங்கள் ஆகும். வேதம் மற்றும் உபநிடதனகளின் கருத்துக்கள் பல புராணங்களில் விளக்கப்பட்ட்ள்ளன மேலும் பின்பற்றப்பட்டன. இந்தியாவில் தோன்றிய புராணங்களை பற்றி அடுத்த பதிவில் சிந்திப்போம்.
source: Wikipedia
நன்றி!!!
ம.ஞானகுரு
2 comments:
தொடருங்கள்.. சுவாரஸ்யம்
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_11.html) சென்று பார்க்கவும்... நன்றி...
Post a Comment