Saturday, July 28, 2012

தமிழர்கள் வரலாறு-1



                  தமிழக கோவில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைபாடுகலாகட்டும்,   தூண்களில் ஒரு நூல் இல்லை கூட கோணல் இல்லாமல் கட்டப்பட்ட 1000 கால் மண்டபங்கள் ஆகட்டும், 1000 ஆண்டுகளாக இயற்க்கை சீற்றங்களால் கூட சிறு தேய்வுகள் இன்றி, எந்த வண்ண பூச்சும் இன்றி  நிமிர்ந்து நிற்கும் தஞ்சை கோபுரம் ஆகட்டும்.  இன்னும் ஆதி தமிழர்கள் செய்த பற்பல அற்புதமான விஷயங்கள் பற்றி வியப்புடன் பேசும் நாம் இதை பற்றிய தேடலை மேற்கொண்டோமா? அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விஷத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்....

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 -  அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்று மா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி (வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால் வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரிமா
1/64 - கால்வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ் முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - 􀂫􀁿மி
1/165580800 - அணு  --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைபடி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

அடேங்கப்பா எந்த மொழியிலும் இல்லாத decimal calculation !!!!!!!

           nano particle தான் மிக சிறியது என்று உலகமே பேசிகொண்டிருக்கையில் நம் முன்னோர்கள் அதைவிட சிறிய துகளுக்கு கூட calculation போடிருக்கிரார்கள் என்றால் மிகவும் வியக்கத்தக்க ஒன்றே.
  இவ்வளவு கணிதமும் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது!!!!!
           இந்த எண்களை வைத்தே நுணுக்கமான பல வேலைகளை செய்துள்ளனர் என்றால் நம் முன்னோர்களின் அறிவையும் ஆற்றலையும் எண்ணி பாருங்கள்.
           இன்றைக்கு உள்ள மேம்பட்ட தொழில்நுட்பத்தை வைத்தே நம்மால் செய்ய இயலாத பல அற்புதங்களை அன்றே செய்து வைத்து விட்டனர்.
           கால்குலேடரையும், தொழில்நுட்ப வளர்ச்சி என்று இளைய தலை முறை கூறிக்கொண்டிருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம், தமிழர்களின் சாதனையை பற்றிய தேடல் தொடரும்...!!!
(நான் இட்ட தலைப்புக்கும் உள்ளே இருந்த பொருளும் வேறுமாதிரியாக உள்ளதே என என்னலாம். வலைத்தளத்தில் பல தொடர் பதிவுகள் சென்றுகொண்டிருப்பதால் புது புது தலைப்புகள் இட்டால் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் இவ்வாறு இட்டுள்ளேன்.)

இப்பதிவு பற்றிய தங்களின் கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன...

நன்றி!!!
ம.ஞானகுரு

Friday, July 27, 2012

பெட்ரோலில் இயங்கும் இயந்திரங்களை டீசலில் இயக்க முடியாது ஏன்?

பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களைக் கொண்டு இயங்கும் இரு இயந்திரங்களும் ஒரே மாதிரியானவை தான். இருப்பினும் இரண்டும் வெவ்வேறு வடிவ அமைப்புகளைக் கொண்டவை. ஒவ்வொரு எரிபொருளும் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் தான் எரியத் துவங்கும். இதனைப் பற்றல் வெப்பநிலை என்பர். இது பெட்ரோலுக்குக் குறைவாகவும், டீசலுக்கு மிகுதியாகவும் தேவைப்படும். 

அடுத்து பெட்ரோல் இயந்திரத்தில் எரிபொருள்-காற்றுக் கலவையைப் பற்றவைக்கும் செயலை மேற்கொள்வது தீப்பொறிச்செருகி ஆகும். மேலும், இவற்றில் எரிபொருள்-காற்றுக் கலவையைப் பற்ற வைப்பதற்கு முன்னால் தேவைப்படும் அழுத்த அளவு அதாவது அழுத்த விகிதம் குறைவு. இந்நிலையில், பெட்ரோல் இயந்திரத்தில் டீசலை எரிபொருளாகப் பயன்படுத்தும்போது பற்ற வைக்கும் வெப்பநிலை போதுமான அளவு இல்லாத காரணத்தால் எரிபொருள் பற்றவே பற்றாது. 


அடுத்து டீசல் இயந்திரத்தில், பெட்ரோல் இயந்திரத்தில் இருப்பது போல் தீப்பொறிச்செருகி கிடையாது. இங்கு எரிபொருள் பற்றவைப்பு மிகுந்த அழுத்தத்தின் விளைவாக நடைபெறும். இவ்வாறு பெட்ரோல், டீசல் இயந்திரங்களுக்கு இடையேயுள்ள வடிவமைப்பு வேறுபாட்டினாலும், பற்றவைப்பு வெப்பநிலை வேறுபாட்டினாலும் பெட்ரோலுக்குப் பதிலாக டீசலையோ, டீசலுக்குப் பதிலாகப் பெட்ரோலையோ பயன்படுத்த இயலாது.



நன்றி!!!
தினகரன் 

Tuesday, July 24, 2012

தமிழர்களின் வரலாறு



              தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”.


குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ்,

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது  ஏழு பனை நாடு, ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன. அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன.

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.

இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். வரலாற்றுத் தேடல் தொடரும்!

இப்பதிவு பற்றிய உங்களின் கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன....


நன்றி!!!
ம.ஞானகுரு

Friday, July 13, 2012

தமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை




                                                                  "வர்மம்”  
         ஆதி தமிழன் படைத்த அற்புத கலைகளில் ஒன்று இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இக்கலை தமிழ்நாடு, தமிழ் ஈழம், கேரளா, தற்கால ஆந்திராவின் கிழக்கு பகுதிஇல்  பரவி இருந்தது,  இக்கலை சிதமருதுவதை துணையாக கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.

           இக்கலையை படைத்தவர் சித்தர்களில் சிறந்தவரான அகத்தியர். இது உருவான இடம் பொதிகை மலை (தற்போதைய குற்றால மலை)."தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே" என்ற கி. மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலை சுவடிகளின் வரியே இதற்க்கு சாட்சி.

அகத்தியர் கற்பித்த வர்ம கலைகளில் 
 "அகஸ்தியர் வர்ம திறவுகோல்"
"அகஸ்தியர் வர்ம கண்டி"
"அகஸ்தியர் ஊசி முறை வர்மம்"
"அகஸ்தியர் வசி வர்மம்"
"அகஸ்தியர் வர்ம கண்ணாடி"
"அகஸ்தியர் வர்ம வரிசை"
"அகஸ்தியர் மெய் தீண்டா கலை" 
ஆகியவை குறிப்பிடத்தக்கவை       
             " ஜடாவர்மன் பாண்டியன்" என்ற பாண்டிய மன்னன் இக்கலையில் சிறந்து விளங்கினான் பின்னர் பாண்டிய இனம் அழிய தொடங்கியதும் இக்கலையும் அழிய தொடங்கியது. பின்னர் வந்த சோழர்கள் இதை கற்றனர். பின்னர் இந்த கலை இலங்கை சீன போன்ற நாடுகளில் பரவ தொடங்கியது.
         காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி சீனாவில் இக்கலையை பரப்பினார். Tenjiku Naranokaku என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "The fighting techniques to train the body from India " என்ற பொருளை தருகின்றது.

           இக்கலையானது அனைவருக்கும் கற்றுதரபடமாட்டாது. இதன் ஆசிரியர் தன மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்கவழக்கங்களை அறிந்த பின்னரே கற்று தருவார். இக்கலை மூலம் ஒருவர் தாக்கபட்டால் அதற்கென்று தனியாக உள்ள சிகிச்சை முறையை பயன்படுத்தியே சரிசெய்யமுடியும் என "அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே" என்ற வரிகள் விளக்குகின்றன 


              உலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக் கலை என்பதை அறியும் போது, செந்தமிழ்ப் பரம்பரையின் ஒவ்வோர் உயிரும் உச்சத்தில் நிற்கிறது. சித்தர் பெருமக்களின் தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை, யுகம் யுகமாக நம் மூதாதையர்கள் ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த உண்மைகளின் தொகுப்பாகும். தமிழனுக்குச் சொந்தமான இந்த அரிய கலையின் அற்புதப் பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே பெருமளவில் அறியாதிருப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இன்னொரு புறம், வர்மக்கலை நடைமுறைக்கு ஒவ்வாத பழங்கலை என்றெல்லாம் தமிழ் மக்களே கேலிபேசிக் கொண்டிருப்பது மேலும் வேதனையாக இருக்கிறது. அதன் வெளிபாடே இந்த பதிவு.
       
                             நமது வர்ம கலை பரவிய நாடுகள்:
  
வர்மமும் கிரேக்கமும்!
                 கிரேக்கமும், திராவிடமும் பழங்காலத்தில் கடல்வழித் தொடர்புகளால் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், பல தமிழ்ச் சொற்களைக் கிரேக்கம் உள்வாங்கிக் கொண்டது என்பது காலச் சுவடிகளில் காணும் பதிவு. அப்படி கிரேக்கம் உள்வாங்கிக் கொண்ட எத்தனையோ தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் “வர்மம்”. “வர்மம்” என்ற சொல் கிரேக்கத்தில் “Pharmos” ஆகி, ஆங்கிலத்தில் “Pharmacy” என்ற மருத்துவச் சொல்லாக வழங்கி வருகிறது. 
              “வ” என்பதில் இருக்கும் “ஏ” உச்சரிப்பு, மேனாட்டு மொழிகளின் புணரியல் இலக்கண (Declension) மரபுகளின்படி “கு” ஓசையைத் தழுவுகின்றது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. “Five” என்ற சொல் “Fifty” என மாறும் போதும், “Leave” என்ற நிகழ்காலச் சொல் “Left” என்ற இறந்தகாலச் சொல்லாக மாறும் போதும் “V” ஓசையானது “F” ஓசையாக மாறியிருப்பது காண்க. அவ்வண்ணமே Varma-வும் Pharma ஆயிற்று.

தூரக் கிழக்கு நாடுகளில் “வர்மம்”!

           இதர மொழியினர்க்கு “வர்மம்” என்ற சொல்லை வழங்கிய தமிழ் இனம். வர்மக் கலையையும் வழங்கியிருக்கிறது. “தெற்கன் களரி” என்னும் பெயரால் அறியப்படும் திராவிடர்களின் இந்த வர்மக் கலைதான் சீனம் வரை சென்றது என்பதற்குச் சரித்திர ஆதாரங்கள் உள்ளன(போதி தர்மர்- பின்னர் விளக்கமாக பார்க்கலாம்). 
             தொலைகிழக்கு நாடுகளில் பௌத்தம் பரவிய வேகத்தில், தமிழனின் வர்மக் கலையும் கூடவே பயணம் சென்று வேறு வேறு வடிவங்களில் வளர்ச்சி கண்டுப் பொலிவடைந்தன என்பதைத் தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர்.

             சீனாவில் வேரூன்றியிருக்கும் குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத் தூரக்கிழக்கு நாடுகளின் தற்காப்புக்கலைப் பிரிவுகளான ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது தமிழனின் களரிதான் என்பதற்குச் சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள் வைத்திருக்கின்றது. இந்தச் சாட்சியங்கள் யாவும் மூத்த தமிழ்க்குடியின் புகழை முரசறைந்து நிற்கும் சத்தியங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

வர்ம கலையை அகத்தியர் நான்கு பிரிவுகளாக பிரிக்கிறார் அவை:


தொடு வர்மம்:
            இது பலமாக தாக்க படுவதன் மூலம் ஏற்படுகிறது. இதை எளிதில் குனபடுத்த முடியும் 

தட்டு வர்மம்:
       இது ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாமல் மிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும், நான் ஏற்கனவே கூறியவாறு இம்முறையில் தக்கபடுபவரை இதற்க்கு உரிய தனியான சிகிச்சை முறையில் மட்டுமே குனபடுத்த முடியும்

நோக்கு வர்மம்:
         பார்வை ஒரே இடத்தில செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். இந்த முறை ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். நோக்கு வர்மம் முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகர் உலகில் எவரும்  இல்லை என குறிப்பிடுகிறார் 

படு வர்மம் :
        நான்கு வகை வர்மங்களில் அபாயகரமானது இதுவே, உடலில் உள்ள வர்ம பகுதிகளில் அடியோ தாக்குதலோ ஏற்படுத்தினால் அதுவே படு வர்ம ஆகும். இத்தாக்குதலுக்கு ஆளானவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்
         ஒரு மனிதன் படுவர்மா புள்ளிகளில் அடிபட்டால் உடனே மயங்கி விழுவான் என்று, வாயில் நுரை தள்ளி நாக்கு வெளியே தள்ளும் என்றும், அடிபட்ட இடம் குளிர்ச்சியாக என்றும் குறிப்பிடுகிறார் எல்லோராலையும் இதை செய்து விடமுடியாது. மிகுந்த பயிற்சி உள்ளவரால் மட்டுமே இது இயலும்.  
        
 உடலில் உள்ள முக்கியமான வர்ம புள்ளிகளை பட்டியலிடுகிறார் அவை:
         
         தலை பகுதியில் முக்கியமான 37  வர்ம புள்ளிகளும்
         நெஞ்சு பகுதியில்  13  வர்ம புள்ளிகளும்
         உடலின் முன் பகுதியில் 15 வர்ம புள்ளிகளும் 
         முதுகு பகுதியில் 10 வர்ம புள்ளிகளும்
         கைகளின் முன் பகுதியில் 9 வர்ம புள்ளிகளும்
        கைகளின் பின் பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்
        கால்களின் முன் பகுதியில்  19  வர்ம புள்ளிகளும்
        கால்களின் பின் பகுதியில்  13  வர்ம புள்ளிகளும்
       கீழ் முதுகு பகுதியில்  8 வர்ம புள்ளிகளும்
இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்...



வர்மத்தின் அதிசயங்கள் !!

              வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்
             ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.
            வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.
            ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.
          ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.
          நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும்.
          மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.

                 மேற்கூறிய உண்மைகளைச் சிலர் நம்ப மறுக்கலாம். நக்கல் புரியலாம். ஆனால் வர்மக் கலையின் அரிச்சுவடிகளையேனும் அறிய நேரிடுபவர்க்கு அங்ஙனம் மறுக்கவோ நகைக்கவோ இயலாது என்பது திண்ணம். வர்மத்தின் அதிசயங்களை அறிவார் மட்டுமே அறிவார்.

      

              அறிவியல் பதிவுகளாய் எழுதி வந்த நான் முதன் முதலாக வரலாற்று சம்பந்தமான பதிவை எழுதுகிறேன், வார்த்தை நடை, வரிகளின் கோர்வையில் பிழைகள் இருந்தால் தங்களின் கருத்துகளை வரவேற்கிறேன் கமெண்ட் இல் சொல்லுங்கள். 

நன்றி!!!
ம.ஞானகுரு