Sunday, August 21, 2011

பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது?

பிரபஞ்சம் (universe)
பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது?
முத்துக்களை தூவிவிட்டது போல வானத்தில் தோற்றமளிக்கும் நட்சத்திரங்கள் உண்மையில் ஒரு பொய் தோற்றம் தான். இந்த பிரபஞ்சத்தில் விண்மீன்கள் திட்டு, திட்டாக குவியலாக உள்ளது (இதை கடந்த பதுவுகளிலையே பார்த்துவிட்டோம்).
இந்த பிரபஞ்சம் 14.3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு பெரு வெடிப்பு (big bang theory) மூலம் உருவானது என்கிறது அறிவியல். (அதிலும் பெரு வெடிப்பு கொள்கையே தவறு என்று கூறும் அறிவியலார்களும் உண்டு ) ஆனால் அந்த பெரு வெடிப்பு கொள்கை நிகழ்வதற்கு ஒரு நொடிக்கு முன்பு எப்படி இருந்தது என்பதற்கு அன்மீகதிலோ அல்லது கடவுளிடமோ தான் கேட்க வேண்டும்.


நாலா பக்கமும் புகை மூடம் போல விரிந்த பிரபஞ்சம் நாளாக ஆக திட்டு திட்டாக ஆங்காங்கே புகை மூட்டங்கலாக திரண்டு உடுமண்டலங்கள்(galaxy) உருவாகியது. இந்த உடுமண்டலங்கள் நாளடைவில் நட்சதிரன்களாக பிரிந்து இன்று இருக்கும் நிலையை எட்டி உள்ளது

இனி ஒளி ,ஒலி மற்றும் உயிரினங்கள் எவ்வாறு தோன்றியது என்பதை பாப்போம்
ஓலி, ஒளி, பொருள், ஈர்ப்பு விசை எவ்வாறு பிறந்தது ?
ஒளி (light):
மாபெரும் வெடிப்புடன் ஒரு நாள் உதித்தது இந்த பிரபஞ்சம் (14 .3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு )நெருப்புகுலம்புடன் ஒளிரும் ஒரு மாபெரும் கோளமாக அது விரிந்து கொண்டே இருந்தது
அக்கோலதினுள் அணுவின் மூலக்கூறுகளாகிய electron, proton மற்றும் neutron மற்றும் பிற அடிப்படை துகள்கள் யாவும் மிக பிரகாசமான ஒளி வெள்ளத்துடன் நிறைந்து கிடந்தன
பொருளில் அவை ஒன்றாக தெரிந்தாலும் பொருள் என்றும் ஒளி (light) என்றும் வேறுபடுத்த கூடியவையாக அவை இருந்தன பொருள்களுக்குள்ளே சிறை பட்டு கிடந்த ஒளியின் போட்டோன்கள் அணு துகள்களுடன் மோதி எதிரொலித்து உள்ளே சுற்றியபடி கிடந்தனஅது தான் அணைத்துக்குமான மூல பிரபஞ்சம் அல்லது குழந்தை பிரபஞ்சம் ஆகும். இந்நிகழ்வு நடக்க அது 3800 ஆண்டுகள் எடுத்து கொண்டது. பின்பு அது பான் மடங்காக விரிவடைந்ததால் பிரபஞ்சம் குளிர்வடைந்தது electron, proton மற்றும் neutron மற்றும் பிற துகள்கள் ஒன்று கூடி (atom) அணு உருவாகியது
இதனால் வெற்றிடம் மிகுந்தது இதனால் இய்ம்பூதங்களில் ஒன்றான ஆகாயம் உருவாகியது

ஒளி சுதந்திரமாக பரவ ஆரம்பித்தது
ஒரு வழியாக ஒளி வேறு அணு வேராக பிரிந்தது அன்று தோன்றிய ஒளி விரிவடைந்திருக்கும் பிரபஞ்சதினுள் பரவியபடியே இருந்தது இருக்கிறது அதே ஒளி இன்றும் நம்மை நோக்கி வந்த படி உள்ளது
அந்த ஆதி ஒளியை 14 பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகும நம்மால் கருவிகள் மூலம் இன்றும் காண முடிகிறது அவ்வொளியை (cosmic micro wave band - cmb) என்று அழைக்கிறார்கள்டிவி இல் இரண்டு சேனல்களுக்கு இடையே ஏற்படும் இரைச்சலில் 1 சதவீதம் இந்த நுன்னலயாலே ஏற்படுகிறது தொலைநோக்கியின் மூலம் இதை ஆராயும் போது எல்லா திசைகளிலிருந்தும் ஒரே சீராக
ஒரே மாதிரியாக பரவி இருப்பது தெரியவரிகிறது
1965 லையே ரேடியோ ஆண்டேனக்களில் ஒரு வித இரைச்சலை இவ்வலைகள் ஏற்படுத்துவதை கண்டறிந்துள்ளனர்
cosmic baground explorer என்டர் விண்கலம் 1990 இல் இந்த ஆரைய்சிக்க்காகவே அனுப்பப்பட்டது எதிர்பார்த்த படி cmb அகிலம் முழுதும் சீராக இருப்பதை நிரூபித்தது
பிரபஞ்சத்திற்கு முழுமுதற் காரணமாக விளங்கும் ஆதி பிரபஞ்சதினுள் இருந்து நாதம் (sound) பிறந்தது
அணுவும் ஒளியும் இணைந்து பொருட்கள் உருவாகும் போது ஓலி (sound) உருவானது எப்படி
ஓலி பரவும் போது அடுத்தடுத்து காற்றை நசுக்கியும் தளர்த்தியும் (அலையை உருவாக ) பரவுவதை போல
பிளச்மாவும் நசுக்கப்பட்டு தளர்தபட்டும் சலனப்பட்டது நசுங்கிய இடங்களில் பிளாஸ்மா மேலும் சூடடைந்தது
தளர்த்தப்பட்ட இடங்களில் மேலும் குளிர்வடைன்தது இதன் காரணமாக தான் ஆரம்ப குழந்தை பிரபஞ்சத்தில் திட்டு திட்டக வெப்ப மாற்றங்கள் ஏற்பட்டன. பிரபஞ்சம் விரிவடைகையில் இதுவும் விரிவடைந்தது

இது இப்படி இருக்க ஆரம்ப பிரபஞ்சத்தில் ஒளியின் தாகுதளிளிருந்து விடுபட்ட அணுக்கள் எங்கெல்லாம் ஒலியால் பெருக்கப்பட்டு அடர்வாகினவோ அங்கெல்லாம் அவை ஒன்று கூடி திரண்டன திரட்சி ஏற்பட்டதால் ஈர்ப்புவிசை ஏற்பட்டது இந்த நிறை ஈர்ப்பு விசையினால் பல பொருட்கள் ஒன்று திரண்டனஅதே போல் ஒலியால் தளர்வு அடைந்த பொருட்கள் ஈர்ப்புதிகமான பொருளை நோக்கி சென்றன இப்படியாகவே உடுமண்டலங்களும் கோள்களும் உருவாகின
நாதம் முதலில் தோன்றியது பின்பு வித்(ந்ட் )துக்கள் தோன்றியது.
எங்கோ கேட்டது போல இருக்கிறதா இதை தான் அருணா கிரி நாதர் நாத விந்துகலாதி நோ நாம என்று பாடியிருக்க்ரர்
நாதத்திலிருந்து விந்து பிறந்ததாக சைவ சித்தாந்தம் கூறுகிறது ஒளியே பிரணவம் என்றும் அதுவே அனைத்திற்கும் மூல காரணம் என்றும் சித்தாந்தம் கூறுகிறது
இது போல அணைத்து சமயங்களிலும் எதோ ஒரு வழியில் இதை சொல்லி இருப்பார்கள்
அனால் இதை ஆதி மனிதர்கள் எவ்வாறு அறிந்தார்கள் என்பது ஆச்சர்ய மகா உள்ளது
எந்த கருவியும் இன்றி மெய்யே கருவியாக கொண்டு கண்டுபிடித்திருக்க வேண்டும்
பிரபஞ்சம் ஆரம்பம் முதல் தற்போது வரை
Wednesday, August 17, 2011

பிரபஞ்சம்-1 (universe-galaxies)அண்டங்கள் (galaxies)
வானத்தில் பரவிக்கிடக்கும் நட்சத்திரங்களின் தொகுப்பே உடுமண்டலங்கள் அல்லது அண்டங்கள் அல்லது galaxy ஆகும்.நட்சத்திரங்கள் என்றால் ஒன்றல்ல, இரண்டல்ல, ஆயிரமல்ல, லட்சக்கணக்கான நட்சத்திரங்களின் தொகுப்பே galaxy ஆகும்
நமது galaxy ஆகாய கங்கை அல்லது பால் வெளி வீதி (milky way galaxy) என்றலைக்கப்படுகிறது.

இவற்றின் பரப்பு சில ஆயிரங்களிலிருந்து சில லட்சம் ஒளி ஆண்டுகள் வரை இருக்கலாம் . இவற்றின் நிறை பல மில்லியன் / ட்ரில்லியன் சூரியக்குடும்பங்களின் நிறை அளவுக்கு இருக்கும் ஒரு உடுமண்டலதுக்கும் மற்றொரு உடுமண்டலதுக்கும் இடையே பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரம் இருக்கும்

நாம் இருப்பது ஒரு மாபெரும் சுருள் மண்டலத்தில் (spiral galaxy). இதன் விட்டம் ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் இருக்ககூடும். அனால் நம்மருகே இருக்கும் ஆண்டிறோமேடா உடுமண்டலம் 2 .3 ஒளிஆண்டுகள் விட்டம் கொண்டதுஉடுமண்டலங்கள் தான் அமைப்பை பொருத்து 4 வகையாக பிரிக்கப்படுகிறது

1 .சுருள் வடிவ உடுமண்டலம்: (spiral galaxies)2 . லேண்டிகளர் உடுமண்டலம்: (lenticular galaxies)
இதுவும் ஒரு வகையான சுருள் வடிவ உடுமண்டலம் தான் ஆனால் சுருளை உருவாக்கும் நடுப்பகுதி வேகமிழந்து
எரிபொருள் தீர்ந்து விட்டதால் இப்படி அழைக்கின்றனர் இவை காலத்தால் பழையவை மேலும் இவற்றின் அருகில் ஈர்ப்பு சக்தி அதிக முடைய வேறொரு உடுமண்டலம் இல்லாதிருக்க கூடும்
(இது அண்டங்களுக்கு மட்டுமல்ல நமக்கும் பொருந்தும்)3 . நீள்வடிவ உடுமண்டலம் : (eleptical galaxies )
இவ்வுடுமண்டலங்கள் தன்னை தானே சுற்றி கொள்ளாததால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன, இருந்த போதிலும் இவற்றில் உள்ள கோள்கள் நட்சத்திரங்கள் சுற்றி கொண்டுதான் இருக்கும் மொத உடுமண்டலமும் சுற்றுவதில்லை


4 . வடிவமற்ற உடுமண்டலங்கள் (irregular galaxies)
இவை ஒழுங்கான உருவமில்லாதவை விநோதமானவை ஆயரக்கனக்கான வினோத வடிவம் கொண்ட உடுமண்டலங்கள் இருக்கின்றனநீங்கள் பார்க்கும் இந்த உடுமண்டலம் இணைந்து இன்னும் சில பில்லியன் ஆண்டுகளில் ஒரே உடுமண்டலமாக மாறிவிடும்
நீங்கள் பார்க்கும் இந்த 2 உடுமண்டலங்களும் உள்ள சண்டையை கண்டுகளியுங்கள். இதில் ஒருவர் இன்னொருவரை இல்லுக்க முயற்சிக்குரர் 200௦௦ மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறை யாரோ வெற்றி பெருகிரர்கலாம்
இத்தனை உடுமண்டலங்களை பார்த்து விட்டு நம் பால் வெளி அண்டத்தை பார்க்காமல் போனால் எப்படி இது நம் சூரிய குடும்பம் இருக்கும் பால் வெளி அண்டம்நமது சூரியன் இருக்கும் இடத்தை குறித்திருக்கிறார்கள் கவலைப்படதிர்கள் நீங்களும் நானும் இந்த புள்ளியில் புள்ளியில் புள்ளியல் புள்ளியில் புள்ளியாய் ................. இருக்கொறோம் .
இனி பால் வெளி அண்டத்தின் இயல்புகளை பாப்போம் :
விட்டம்: 90000 ஒளி ஆண்டுகள்
நட்சத்திரங்களின் எண்ணிக்கை : 200 பில்லியன் ( இருக்கும், இருக்கலாம் நான் எண்ணி பார்கவில்லை )
மொத நிறை : ௧ டிரில்லியன் சூரிய நிறைநமது சூரியனுக்கும் மையத்துக்கும் உள்ள தூரம் : 26000 ௦ ஒளிஆண்டுகள்
சூரியன் உடுமண்டலத்தை சுற்றி வரும் வேகம் : ரொம்ப இல்ல 220 கிலோமீட்டர் / விநாடி
சூரியனின் ஒரு ஆண்டு : 225 மில்லியன் ஆண்டுகள் (அதாவது ஒரு முறை உடுமண்டலத்தை சுற்ற எடுத்து கொள்ளும் கால அளவு )
(1 ஒளியாண்டு என்பது ஒளியின் திசை வேகத்தில் ஒரு பொருள் 1 வருடத்திற்கு பயணம் செய்யும் தூரம் ஆகும்)

(புதிதாக படிப்பவர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்துவிட்டு படிக்கவும் அப்பொழுது முழுமையான தெளிவு பெற முடியும்)

(நன்றி நண்பர்களே அடுத்த பதிவு பிரபஞ்சம் universe இந்த பிரபஞ்சம் , உயிர்கள், பொருட்கள் எல்லாம் எவ்வாறு தோன்றின என்பதை பார்க்கலாம் முக்கியமான பதிவு aug 20 இரவு பதிவு இடப்படும்)

Wednesday, August 10, 2011

நட்சத்திரங்களின் கதை


நட்சத்திரங்கள்(stars):இன்றைய தினம் நம் பிரபஞ்சத்தில்(universe) ஓட்டெடுப்பு நடத்தினால் பெரும்பான்மையாக நட்சத்திரங்கள் தான் இருக்கும்.
நம் பூமி போன்ற கிரகங்கள்(planet) எல்லாம் சிறுபான்மையினர் தான்

நட்சத்திரங்கள்(stars) எவ்வாறு பிறக்கின்றன ?இந்த பிரபஞ்சத்தில்(universe) வெறும் வெற்றிடம் மட்டும் இல்லை வாயுக்களாலும், தூசுக்களாலும் நிரப்பப்பட்டுள்ளது


இந்த வாயுக்களும், தூசுக்களும் சேர்ந்து மேக மூட்டமாய் இருக்கும் இடத்தை நெபுளாக்கள்(nebula) என்று அழைக்கின்றனர் .ஹைட்ரோஜன்(hydrogen), ஹீலேயம்(heleyum), தாதுக்கள்(அணுக்கள் & மூலக்கூறுகள்) கொண்ட மேகத்தில் ஒன்றுக்கொன்று சிறு ஈர்ப்பு விசையும், விலகலும் ஏற்படுகிறது. இந்த விசைகளினால் தாதுக்கள் சுழல ஆரம்பிக்கின்றன.
இதனால் அணுக்கள் நெருங்குகின்றன. இவை சுற்ற சுற்ற வெப்பமும் அதிகரிக்கிறது. இதனால் வாயுக்கள்(நிறை குறைந்தவை) உள்ளும், தாதுக்கள்(நிறை அதிகம் கொண்டவை) வெளியிலும் கொண்டு வேகமாக சுழல்கிறது

இதில் உள்ளே சுற்றும் வாயுக்கள் நட்சத்திரங்களகவும், வெளியே சுற்றும் தாதுக்கள் கோள்களாகவும், , பெரும் பாறைகளாகவும், நிலக்களாகவும் உருமாறுகின்றன, இந்த சமயத்தில் அந்த நட்சத்திர மண்டலத்தின் வயது 10 ,00 ,000 ஆண்டுகள் ஆகும்.

ஆம் , இந்நிகழ்வு நடப்பதற்கு 10,000௦ ஆண்டுகளிலிருந்து 10,00,000 ஆண்டுகள் வரை ஆகும்

நமக்கு எப்படி இரவும் பகலும் இருக்கிறதோ அதே போல நட்சத்திரங்கலை வாழ வைப்பது இரு சக்திகள், அவை ஈர்ப்பு சக்தியும், அழுத்தமும் தான்.
ஒரு நட்சத்திரம் உயிர் வாழ வேண்டுமாயின் அது சுழல்வதற்கு தேவையான சக்தியை விட திக சக்தியை வெளியிட வேண்டும் இதனாலே தான் நம் சூரியன் பிரகாசமாக இருக்கிறது


நட்சத்திரங்கள் எவ்வாறு ஜொலிக்கின்றன ?நட்சதிரங்கள் பிரகாசிக்க காரணம் அணுக்கரு பிணைவு நிகழ்வு(nuclear fusion) ஆகும்.
நிறை குறைந்த பொருட்கள், நிறை அதிகமுள்ள பொருட்களுடன் மோதி பிணைந்து சக்தி , ஒழி , வெப்பம் வருகின்றன . அந்த நட்சத்திரமும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு ஜொலிக்கின்றன

நட்சதிரங்கள் எவ்வாறு அழிகின்றன ?
எதுவும் நிரந்தரமல்ல என்பதற்கேற்ப நட்சத்திரங்களின் மையத்தில் இறுப்பு இருக்கும் ஹைட்ரோஜென் தீர்ந்து கொண்டிருக்கும் அது தீர்ந்து போனதும் நட்சத்திரம் சுருங்க ஆரம்பிக்கிறது வெளிப்புறம் உள்ள ஹைட்ரோஜென் அதிக வேகத்தில் எரிய ஆரம்பிக்கிறது இதனால் சக்தி மேலும் அதிகரிக்கிறது
இதனால் வெளிப்புறம் சிதற ஆரம்பிக்கிறது.
இறுதியில் எதிலிருந்து பிறந்ததோ அது போலவே மாறி விடுகிறது நட்சதிரங்கள்
நேபுலாவிளிருந்து தோன்றி இறுதியில் நேபுலாவகவே மாறிவிடுகிறது
இவை செம்பூதங்கள் என்றலைகப்படுகின்றன.

(நன்றி நண்பர்களே இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை comment ல சொல்லுங்க
அடுத்த பதிவு நட்சத்திரங்களின் தொகுப்பான அண்டங்கள் universe)