Thursday, August 30, 2012

இந்தியாவின் மிக உயரமான கட்டிடம்                 இந்தியாவின் மிக உயரமான  கட்டிடம் என்ற பெருமையை பெற போகும் கட்டிடம் SOUTH CENTRAL MUMBAI இல் கட்டப்பட்டு வருகிறது WORLD ONE என பெயரிடப்பட்டுள்ள இந்த அபார்ட்மென்ட் 2014 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்படும்.
          REALITY MAJOR LODHA DEVELOPMENT என்ற நிறுவனம் 2,000 கோடி($ 424.67 million) மதிப்பீட்டில் 17 acre நிலப்பரப்பளவில் காட்டிவருகிறது 
          117 மாடிகள் கொண்ட இக்கட்டிடம் 1450 அடி or 450 மீட்டர் உயரம்(கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர்) கொண்டது.
          இந்த கட்டிடத்தில் மொத்தம் 300 அபார்ட்மென்ட் 3 or 4 பெட்ரூம்கள், நீச்சல்குளம் மற்றும் சகல வசதிகள் கொண்டதாக கட்டபடுகிறது. மேலும் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்க மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து உலக தரம் வாய்ந்த விலையுயர்ந்த marbles மற்றும் அலங்கார பொருட்கள் கொண்டுவரப்பட்டு சமையல் அறை, பெட்ரூம், பாத்ரூம் மற்றும் வரவேற்ப்பு அறைகள் அலங்கரிக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே அபார்ட்மென்ட் வாங்க பூகிங் தொடங்கிவிட்டது. ஒரு அபார்ட்மென்ட் இன் விலை எவ்வளவு தெரியுமா 7.5 கோடியிலிருந்து 50 கோடி வரை வசதிகளுக்கேற்ப உள்ளது. 
   உலகில் சிறந்த கட்டிட பொறியாளர்கள் கொண்டு தீ விபத்து தடுப்பது, இயற்க்கை சீற்றங்களில் இருந்து பாதிப்படையாமல் இருப்பது போன்ற அணைத்து காரணிகளையும் ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் கட்டப்பட்டு வருகிறது


  250,000 cubic metres சிமெண்ட்-கான்க்ரீட், 35,000 metric tonnes இரும்பு கம்பிகள், 40,000 square metres கண்ணாடி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது, மேலும் 18 high-speed lifts, ஒவ்வொரு lift உம் வினாடிக்கு 3 மாடி பயணம் செய்யும் வேகம் கொண்டது.இந்தியாவில் உயர்ந்த கட்டிடங்கள் சில:

1. IMPERIAL TOWER 1& 2(mumbai)
          இது தான் இந்தியாவின் தற்போதைய உயர்ந்த கட்டிடம் 833 அடி(254 metres) உயரம் கொண்ட இது மொத்தம் 60 மாடிகளை கொண்டது.
imperial towers google map இல் காண

2. LODHA BELLISSIMO A & B & C
         இந்தியாவின் இரண்டாவது உயரமான கட்டிடமான இது 728 அடி(222 metres) உயரம் கொண்டது மொத்தம் 53 மாடிகளை கொண்டது.

3. VIVAREA 1 & 2 & 3
        656 அடி(200 metres) உயரம் கொண்ட இது மொத்தம் 45 மாடிகளை கொண்டது.

4. ASHOK TOWERS D(mumbai)
         193 அடி உயரம் கொண்ட இது மொத்தம் 49 மாடிகளை கொண்டது.
ashok towers google map இல் காண

11. ANTILIA(mumbai)
         முகேஷ் அம்பானியின் வீடான இது தான் உலகின் மிக பெரிய வீடு என்ற பெருமை கொண்டது 563 அடி(173 metres) உயரம் கொண்ட இது மொத்தம் 27 மாடிகளை கொண்டது. இங்கு மொத்தம் 600 வேலையாட்கள் வேலை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

antilia home google map இல் பார்க்க

இந்தியாவின் உயரமான முதல் 100 கட்டிடங்களில் கூட நமது சென்னையின் ஒரு கட்டிடமும் இடம் பெறவில்லை.


அடுத்த பதிவு உலகின் மிக உயரமான கட்டிடம்

மறக்காமல் கருத்துக்களை comment boxil இட்டு செல்லுங்கள்...

நன்றி!!!
ம.ஞானகுரு

Saturday, August 25, 2012

வேற்று கிரக வாசிகள் நம்மை வேவு பார்க்கிறார்களா?


             வேற்றுகிரக வாசிகள் பூமியை அடிக்கடி சந்திரன், செவ்வாய் கிரகங்களில் இருந்து உளவு பார்க்கிறார்கள் (இதை பற்றி என்னுடைய 2012 இல் உலகம் அழியுமா என்ற பதிவில் இதை பற்றி தெளிவாக கூறியிருக்கிறேன்), பூமிக்கு வந்திருக்கிறார்கள், வசிக்கிறார்கள்(இதை பற்றி மேலும் அறிய  உலகில் மறைக்கப்படும் உண்மைகள்). 


              ஆதி காலத்து உலக வரைபடம் வேற்று கிரக வாசிகளின் கூற்று படியே வரையபட்டிருக்கவேண்டும் பூமிக்கு உயர சென்று பார்க்காமல் தெளிவாக துல்லியமாக வரையபட்டிருப்பது அவர்கள் உதவி இன்றி   சாத்தியம் இல்லாத ஒன்றே, இன்னும் பல கூற்றுகள் வேற்று கிரக வாசிகள் பற்றி ஆதிகாலத்திலிருந்து இன்று வரை இருந்துகொண்டு தான் இருக்கின்றன. ஆனால் இவை எல்லாம் பொய் என்று கூறுபவர்களும் உண்டு. 

இதில் என்னுடைய கருத்து என்னவென்றால் கோடானகோடி நட்சதிரகூட்டங்களை கொண்ட இப்பிரபஞ்சத்தில் 

சூரியன் ((பிரபஞ்சம் சூரியன் பூமி பற்றி மேலும் தகவல்களுக்கு என்னுடைய பதிவை படிக்க இங்கே கிளிக் செய்யவும்) என்னும் சிறு நட்சத்திரத்தில் உள்ள
(இது போன்று பல படங்கள் உள்ளன பதிவின் நீளம் கருதி குறைதுக்கொள்ளவேண்டியாகிவிட்டது. )
 கண்ணுக்கு தெரியாத சிறு சிறு பூமி என்னும் கோளில் மனிதன் என்னும் ஒரு ஏலியன் வாழும் போது இப்பிரபஞ்சத்தில் நம்மை போல் அல்ல நம்மை விட அதியுயர் அறிவு கொண்ட ஏலியன்கள் வாழ்வது சாத்தியமே.
 அதற்கு சாட்சியாகவே சமீபத்தில் ஒரு நிகழ்வும் நடந்துள்ளது   

            பூமியில் இருந்து, 57 கோடி கி.மீ., தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய சூழல் குறித்து ஆராய, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான, "நாசா' சார்பில் "கியூரியாசிட்டி ரோவர்' விண்கலம் அனுப்பப்பட்டது.

(இதை பற்றிய மேலும் தகவல்களுக்கு செவ்வாயில் கால் பதித்த கியூரியாசிட்டி) செவ்வாயின் சுற்றுச்சூழல் அமைப்பு, பாறைகள் மற்றும் மண்ணுக்கு அடியில் ஹைட்ரஜன் அளவு போன்ற பல்வேறு அம்சங்களை ஆராய, 10 உபகரணங்களுடன் கடந்த, 6ம் தேதி செவ்வாயில் தரையிறங்கிய, "கியூரியாசிட்டி' திட்டமிட்டபடி, தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது.

             முதல்கட்டமாக, செவ்வாயின் நிலப்பரப்பை பல்வேறு திசைகளில் இருந்து படம் பிடித்து, பூமிக்கு அனுப்பியது.செவ்வாய் கிரகத்தின் அடிவானத்தில், மர்மமான யு.எப்.ஓ., எனப்படும் அடையாளம் காண முடியாத புதிரான பொருள், அங்குமிங்கும் அசைந்தாடுவதை, "கியூரியாசிட்டி' படம் பிடித்துள்ளது. 
             வேற்று கிரகவாசிகள் தான், செவ்வாயில் மனிதனின் நடவடிக்கைகளை வேவு பார்ப்பதாக, யூ.எப்.ஓ., ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இது, வழக்கமாக கிராபிக் தொழில்நுட்பத்தில் காணப்படும், "டெட் பிக்சல்'கள் என, சில விஞ்ஞானிகள் விளக்கம் தருகின்றனர்.வேற்று கிரகவாசிகள் மற்றும் விண்வெளியில் உள்ள அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பொருட்கள் குறித்து ஆய்வு செய்து வரும், பிரிட்டனைச் சேர்ந்த, "அலீன் டிஸ்க்ளோசர்' அமைப்பின் ஸ்டீபன் ஹன்னார்டு என்பவர், 

             சமீபத்தில், "கியூரியாசிட்டி' அனுப்பிய படத்தில், செவ்வாயின் அடிவானத்தில் அடையாளம் காண முடியாத, பறக்கும் தட்டு போன்ற ஒரு மர்மப் பொருள், வெள்ளை நிறத்தில் அங்குமிங்கும் பறந்து திரிவதை ஹன்னார்டு கண்டுபிடித்துள்ளார்.அவர் கூறுகையில், 

""கியூரியாசிட்டி' அனுப்பிய வீடியோவில், செவ்வாய் கிரகத்து வானில் நான்கு பொருட்களை காண முடிகிறது.  செவ்வாயில், புவிகிரகவாசிகளின் நடவடிக்கைகளை வேற்று கிரக சக்திகள், பறக்கும் தட்டுகளின் மூலம் வேவு பார்ப்பதையே "கியூரியாசிட்டி'யின் வீடியோ பதிவுகள் காட்டுவதாக, யூ.எப்.ஓ., ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. கியூரியாசிட்டி அனுப்பியிருக்கும் மர்ம பொருள் வேற்றுகிரகவாசிகளின் வேவு கப்பல்களாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆக மனிதனோடு பஞ்சாயத்துக்கு மல்லுக்கட்ட வேற்றுக்கிரகவாசிகள் தயாராகிவிட்டார்களோ?


கியூரியாசிட்டி ரோவர் பற்றி  மேலும் சில தகவல்கள்:


*செவ்வாயில் தரையிறங்கிய இடத்தில் இருந்து, ஆறு மீட்டர் தூரத்துக்கு, "கியூரியாசிட்டி ரோவர்' நகர்ந்து சென்று, ஆய்வுகளை செய்துள்ளது

*ஒரு டன் எடை கொண்ட இந்த கியூரியாசிட்டி விண்கலம்தான் இதுவரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப்பட்ட விண்கலங்களிலேயே பெரியதாகும். 

* 8 மாத கால பயணத்தை முடித்து பத்திரமாக செவ்வாய் கிரகத்தில் லேண்ட் ஆகியுள்ள இந்த விண்கலம் அடுத்த 2 ஆண்டு காலத்திற்கு செவ்வாய் கிரகத்தை அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து அனுப்பப்போகும் படங்களும், வீடியோக்களும், ஆய்வுத் தகவல்களும் மனித குலத்தை மாற்றிப் போடப் போகும் முக்கிய விஷயமாகும்.

* 2030 ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை ஏற்கனவே அமெரிக்கா அறிவித்துள்ளது. அதற்கான திட்டமிடல்களும், ஆய்வுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. எனவே கியூரியாசிட்டி தரப் போகும் தகவல்கள் மிகுந்த ஆர்வத்தையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன.

* செவ்வாய் கிரகத்தில் இறங்கியபோது தனது நிழல் கிரகத்தின் தரையில் படிந்ததை படம் எடுத்து அனுப்பியுள்ளது கியூரியாசிட்டி. இது அந்த விண்கலத்தின் நிழல் அல்ல, மாறாக மனித குலத்தின் சாதனை நிழல் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

* ஏற்கனவே மார்ஸ் ஸ்பிரிட், ஆப்பர்சூனிட்டி என இரு விண்கலங்களை செவ்வாய்க்கு நாசா அனுப்பியுள்ளதுமறக்காமல் கருத்துக்களை இட்டு செல்லுங்கள் 


இது என்னுடைய 50 வது பதிவு....

23,780 page views & 26 followers பெற்றுள்ளேன்...


எனது அணைத்து பதிவுகளுக்கும் நல்ல வரவேற்பு தந்த நண்பர்களுக்கு நன்றி .


நன்றி!!!
ம.ஞானகுரு

Friday, August 24, 2012

தென் இந்தியாவின் மிக உயரமான கட்டிடம்                   தென் இந்தியாவிலேயே மிக உயரமான அபார்ட்மெண்ட் பெங்களூரில் கட்டப்பட்டு வருகிறது. 46 மாடிகள் கொண்ட இந்த கட்டிடம் தான் தென்இந்தியாவின் பெரிய கட்டிடம் என்ற பெருமை பெறபோகிறது,

 பெங்களுருவின் பண்ணரகட்டா சாலையில் மீனாட்சி மால் கட்டடத்துக்கு அருகே கட்டப்படும் இந்தக் கட்டடம் தான் தென் இந்தியாவிலேயே மிக உயரமான வசிப்பிடமாகும்.

 மந்த்ரி பினாக்கிள்(mantri pinaccle) என்ற இந்த கட்டடத்தில் ஒவ்வொரு அபார்ட்மெண்டும் 3 மாடிகளைக் கொண்டதாக இருக்குமாம். இந்த 46 மாடிகளிலும் சேர்த்து மொத்தமே 133 வீடுகள் தானாம். 

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு ஸ்விம்மிங் பூல், தனித்தனி லிப்டுகள், ஹெலிபேட், கட்டடத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஏர்-கண்டிசனிங், சிஸ்கோ நெட்வோர்க்குடன் கூடிய வசதிகள், நீரை ரீ-சைக்கிள் செய்யும் வசதி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

 உலகின் முன்னணி கட்டடவியல் நிபுணர்கள் இணைந்து இந்தக் கட்டடத்தை உருவாக்கி வருகின்றனர்.

அடுத்த பதிவில் இந்தியாவின் உயரமான கட்டிடத்தை பற்றி பார்ப்போம்


நன்றி!!!
ம.ஞானகுரு

Tuesday, August 21, 2012

இலங்கையில் தமிழர் பகுதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள்: ராஜபக்சே           அதிகாரப்பகிர்வு தொடர்பான, இலங்கை அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த அதிபர் ராஜபக்சே தீர்மானித்துள்ளார். இதைச் செய்தால்தான் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று இந்தியா சார்பில் நெருக்குதல் தரப்பட்டதால் இந்த முடிவுக்கு ராஜபக்சே வந்துள்ளார்.

          ஜே.ஆர்.ஜெயவர்த்தனே இலங்கை அதிபராக இருந்தபோது அரசியல் சட்டத்தில் 13வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டன. மேலும் மாகாண கவுன்சில்களும் உருவாக்கப்பட்டன.

        மேலும் தற்போது இலங்கை மத்திய அரசின் வசம் உள்ள காவல்துறை பொறுப்பு மாகாண கவுன்சிலர்களின் சுயேச்சை அமைப்பாக மாற்றப்படும்.

         இந்த சட்டத் திருத்தம் பின்னர் வந்த அரசுகளால் முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது இந்த சட்டத் திருத்தத்தை முழுமையாகக் கடைப்பிடிக்க ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.

        அதன்படி தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கால அரசுகள் உருவாக்கப்படும். காவல்துறை பொறுப்பு இந்த மாகாணங்களின் சுதந்திர துறையாக மாற்றப்படும்.

         ராஜபக்சேவின் இந்த முடிவுக்கு இந்தியாவின் நெருக்குதலே காரணம் எனக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி இலங்கையின் 60வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.

         இருப்பினும் 13வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தினால் மட்டுமே பிரதமர், இலங்கைக்கு வர முடியும் என இந்திய அரசுத் தரப்பில் இலங்கை அரசுக்கு நெருக்குதல் தரப்பட்டதாக தெரிகிறது.

மேலும் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தையும் இலங்கை அரசு அறிவிக்க வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்தே ராஜபக்சே அதிகாரப் பகிர்வுக்கு வழி வகுக்கும் 13வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி விரைவில் ராஜபக்சே இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவார்.

புதிதாக அறிவிக்கப்படவுள்ள வடக்கு மாகாண கவுன்சிலின் தலைவராக முன்னாள் எம்.பி. ஆனந்தசங்கரி தலைவராக நியமிக்கப்படவுள்ளார். அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா இந்த மாகாண நிர்வாகத்தில் முக்கியப் பங்கு வகிப்பார்.

கிழக்குக் கவுன்சிலில் யாரைத் தலைவராக நியமிப்பது என்பது குறித்து இதுவரை அரசு முடிவெடுக்கவில்லை. இருப்பினும் இந்த மாகாணக் கவுன்சிலுக்கும், அரசு ஆதரவு தமிழர் ஒருவரே நியமிக்கப்படக் கூடும் என்று தெரிகிறது. அதேசமயம், முஸ்லீம் மற்றும் சிங்கள சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 2ம் மட்ட நிர்வாக பொறுப்புகளில் நியமிக்கப்படுவர்.

கிழக்கு மாகாணக் கவன்சில் தலைவர் பொறுப்பில் பிள்ளையன் என்பவர் நியமிக்கப்படலாம் என்ற பேச்சு உள்ளது.

source : oneindia 

இலங்கையில் தமிழர்கள் சம உரிமை பெறவேண்டும் என தமிழக  அரசு எடுத்த சிறு முயற்சிக்கு கிடைத்த சிறு பலன் இது மேலும் சட்டசபை தேர்தலில் நாம் புகட்டிய பாடத்தால் மத்திய அரசு நமக்கு இப்பொழுது பணிந்துள்ளது என்றே கூறலாம். மேலும் தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி ஒன்று திரண்டு நம் போராட்டத்தை வெளிபடுத்தினால் தனி ஈழம் என்பது எட்டாக்கனி ஒன்றும் அல்ல...

கருத்துக்களை கமெண்ட் இல் சொல்லுங்கள். மேலும் இலங்கை தமிழ் நண்பர்கள் தங்கள் கருத்துக்களை தவறாமல் கமெண்ட் பாக்ஸ் இல் இட்டு செல்லுங்கள்...

Wednesday, August 15, 2012

உலகின் மிக பெரிய வழிபாட்டு தளம்


உலகின் பெரிய வழிபாட்டு தளம் என்ற பெருமை பெற்ற கோவில்  "கம்போடியா" நாட்டில் உள்ள "அங்கோர் வாட்"(ANGKOR WAT) கோயில்.

 இந்த கோவிலை கட்டியது யார் தெரியுமா? "இரண்டாம் சூரிய வர்மன்" என்னும் தமிழ் மன்னன். இரண்டாம் சூர்யவர்மன் கம்போடியாவை  கைப்பற்றியவுடன்(1113 – 1150) இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயல்பட்டது.

 . "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது "! !.

இந்த கோயிலை ஒரு கலை பொக்கிசம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் ஒரு பக்க  சுவர் நீளம் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!

 இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது !.பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதைவடையத்தொடங்கியது.

பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது ,அதை அவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.

பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது .அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்று குறிப்பிட்டுள்ளார் !!!!.

இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

 இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது !. 

2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை !! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது !!அங்கர் வாட் என்பது பிற்காலத்தில் இட்ட பெயரே சூரிய வர்மன் இந்த கோவிலுக்கு  இட்ட பெயர் வரலாற்றில் இல்லை அல்லது மறைக்கபட்டிருக்கலாம் 

 உலகின் மிக பெரிய ஹிந்து கோவில் என அறிவித்தது "earth ஒப்செர்வடோரி"  என்ற நாசாவின் ஒரு அமைப்பு.


 இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை ! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே !!
தமிழர்கள் பற்றிய தேடல் தொடரும்!!!!!
இந்த அறிய பொக்கிஷத்தை google map இல் காண
http://maps.google.co.in/mapshl=en&psj=1&bav=on.2,or.r_gc.r_pw.r_qf.&biw=1280&bih=675&um=1&ie=UTF8&q=angkor+wat&fb=1&gl=in&hq=angkor+wat&cid=0,0,839606976138454449&sa=X&ei=4FwrULCyEfCziQf3zYC4Bg&ved=0CKMBEPwSMAk

மறக்காமல் தங்கள் கருத்துக்களை இட்டு செல்லுங்கள்!!!!!

Thursday, August 9, 2012

தமிழர்கள் வரலாறு-02

                                                       காவிரிப்பூம்பட்டினம்
தமிழகத்தில் 99 % ஊர்களின் பெயர் காரனப்பெயராகவே அமைந்துள்ளது அதன் படியே சோழநாட்டின் காவிரியாறு கடலிலுடன் கலக்கின்ற புகார்முகத்தில் இருந்த காரணத்தினால் 'புகார்' என்றும், 'பூம்புகார்' என்று அழைக்கப்பட்ட இந்நகர் அக்காலகட்டத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத்திற்கும் பெயர்போன் துறைமுகநகர். மேலும் கடற்கரை நகரத்தைப் பட்டினமென அழைப்பது பழந்தமிழ் வழக்கு. காவிரியின் கழிமுகத்தில் உருவான நகரமென்பதால் 'காவிரிப்பூம்பட்டினமென்றும்' அழைக்கப்பட்டது.

சோழர்களின் ஒரு தலைநகரமாகவும், இதையும் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள், இலங்கை, பர்மா, மாலத்தீவு, கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் சோழர்கள் ஆண்டார்கள் என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன.

சிலப்பதிகாரத்தின் 'இந்திரவிழவு எடுத்த காதையில்' ஆசிரியர் இளங்கோ புகார் நகர், 'மருவூர்ப் பாக்கம்',
           'பட்டினப்பாக்கம்',
            'நாளங்காடி' என மூன்று முக்கிய பகுதிகளாக விளங்கியதையும், அப்பகுதியில் காணப்பட்ட மக்களின் தொழில்கள, வீதிப்பெயர்கள் பற்றியெல்லாம் விரிவாகவே எடுத்துரைப்பார்.

மருவூர்பாக்கம்:
           இது கடலோரம் அமைந்த அழகிய நகர் இங்கு மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது. இங்கு கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். இந்த ஊரை சுற்றி மீனவர்கள், தறி நெய்பவர்கள், பானை, தானியங்கள், தங்க வைர வியாபாரிகள் பலர் வாழ்ந்துள்ளனர்.

பட்டினப்பாக்கம்:
            இது கடற்கரைக்கு மேற்கே அமைந்த நகரமாகும், இங்கு அரச குடும்பம், உயர் அதிகாரிகள், வியாபாரிகள், நடன, கட்டிட கலைர்கள், மருத்துவர் வாழ்ந்துள்ளனர்.

கி.பி.2ஆம் நூற்றாண்டளவில் வணிகர்கள் உரோமாபுரியிலிருந்தும் (யவனர்கள்), சாவகத்திலிருந்தும் ( இன்றைய இந்தோனேசியா), வட இந்தியாவிலிருந்தும், ஈழத்திலிருந்தும் இங்கு வந்து வணிகம் செய்தார்கள். சோழ வணிகர்கள் இங்கிருந்து சாவகம், காழகம் (இன்றைய பர்மா), ஈழம் போன்ற நாடுகளுக்கு இத்துறைமுகத்திலிருந்து புறப்பட்டு வாணிகம் செய்தார்கள்.

 வேற்று நாடுகளிலிருந்தெல்லாம் மக்கள் புலபெயர்ந்து வந்து இப்புகார் நகரில் வாழ்ந்ததை சிலம்பின் 'கடல் ஆடும் காதையில்' வரும் 'கலந்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்' என்னும் வரிகள் புலப்படுத்துகின்றன.

இளங்கோவின் 'சிலப்பதிகாரத்திலும்' , மேலும் பல புறநானூற்றுச் செய்யுள்களிலும் புகார் பட்டினம் பற்றிய செய்திகள் கிடக்கின்றன. உதாரணமாக சிலப்பதிகாரத்தின் 'இந்திரவிழவு எடுத்த காதை', 'கடல் ஆடு காதை' போன்ற பகுதிகளில் புகார் பற்றியும், அந்நகர அமைப்பு பற்றியும், அங்கு வாழ்ந்த மக்கள் பற்றியும் தகவல்கள் காணப்படுகின்றன. இத்துறைமுகத்திற்கு வந்து குவிந்த பொருட்கள் பற்றிப் பட்டினப்பாலை பின்வருமாறு கூறும்:

"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்துங் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும் ....
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்" (பட்டினப்பாலை 185-193).

மேற்படி செய்யுள் வரிகளில் பல உண்மைகள் தெரிய வருகின்றன. குதிரைகள் கடல்வழியாகக் கொண்டு வரப்பட்டன ('நீரின் வந்த நிமிர்பரிப் புரவி). 'காலின் வந்த' என்பது காற்றின் உதவியினால் வந்த எனப் பொருள்படும். 'காலின் வந்த கருங்குறி மூடை' என்பது பருவக் காற்றின் உதவியினால் வந்த கப்பல்களில் கரிய மிளகு மூட்டைகள் கொண்டுவரப்பட்டன என்பதைக் குறிக்கும். 'வடமலைப் பிறந்த பொன்னும் மணியும்' என்னும் வரிகள் இமயமலைப் புறத்தில் கிடைத்த பொன்னும் மணியும் கங்கையாற்றின் முகத்துவாரத்தின் வழியாகக் கடல்மூலம் வந்ததையும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பக்கத்திலிருந்து சந்தனமும் ('குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்') , அகிலும், தென்னாடான பாண்டிநாட்டுக் கடல்களிலிருந்து முத்துக்களும் ('தென்கடல் முத்து'), கிழக்குக் கடல் வழியாக சாவகத்திலிருந்து பவழமும் ('குணகடல் துகிர்'), கங்கைக்கரை ஊர்களிலிருந்து உள்ளூரிலிருந்து மற்றும் வெளியூர்களான ஈழம் , காழகம் ஆகியவற்றிலிருந்து பல்வேறு பொருட்களும் ('கங்கை வாரியும் காவிரிப் பயனும் .... ஈழத் துணவும் காழகத் தாக்கமும்') இவ்விதம் உள்ளூர் மற்றும் சர்வதேச வர்த்தகம் சிறந்து விளங்கும் நகராகப் புகார் விளங்கியதை அறிய முடிகிறது.

உறையூர் முதுகண்ணனின் சோழன் நலங்கிள்ளியைப் புகழ்ந்து பாடும் புறநானூற்றுச் செய்யுளில் வரும் 'கூம்பொடு மீப்பாய் கலையாது மிசைப்பரந் தோண்டாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்' வரிகள் ஆழமாகவும் கலமாகவும் பல கப்பல்கள் தங்குவதற்கேற்ற வகையில் அமைந்திருந்த புகார் பற்றிக் கூறும்.

மேலும் மருவூர்ப்பாக்கத்தின் சுற்றுப்புறங்களிலும், பட்டினப்பாக்கத்தின் அயலிலும் வீரம் மிக்க மறவர்கள் படைக்கலங்களுடன் விளங்கியதை "மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும் பட்டின மருங்கின் படைகெழு மாக்களும் " ((இந்திரவிழவு ஊர் எடுத்த காதை; 76-77).

இது தவிர நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைநாட்டுப் பொருட்டு ஐவகையான மன்றங்களும்
1.வெள்ளிடை மன்றம்,
2.இலஞ்சி மன்றம்,
3.பூத சதுக்கம்,
4.நெடுங்கல் நின்ற மன்றம்,
5.பாவை மன்றம், பட்டினப்பாக்கத்தில் இருந்ததையும் சிலம்பு விவரிக்கிறது .


மேலும் காவிரிப்பூம்பட்டினத்தில்
1.மலர்வனம்,
2.உய்யாவனம்,
3.சம்பாதி வனம்,
4.சுவேர வனம் மற்றும்
5.உவ வனம் ஆகிய ஐவகை வனங்களும் இருந்ததாக மணிமேகலை இல் உள்ளது . அத்துடன் நகரில்
சிவன், திருமால், பலராமன், இந்திரன், முருகன், சூரியன், சந்திரன்,அருக தேவன் ஆகியோருக்குக் கோட்டங்கள் (கோயில்கள்) அமைந்திருந்ததை சிலம்பு பின்வருமாறு கூறும்:

"அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்
புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில்
உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேல்கோட்டம்
வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்
நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்குஎங்கும் " (கனாத்திரம் உரைத்த காதை; 9-13).
இதுதவிர நகரில் ஏழு புத்த விகாரங்களுமிருந்ததை மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகியன கூறும் (சிலம்பு, 'நாடு காண் காதை'; 14: 'இந்திர விகாரம் ஏழுடன் போகி'; மணிமேகலை; 'இந்திர விகாரம் என எழில் பெற்று').

ஸ்தபதி வை.கணபதியின் 'நகரமைப்புக் கலை' ஆய்வுக் கட்டுரையினை ஆதாரமாக வைத்து நா.பார்த்தசாரதி தனது 'பழந்தமிழர் கட்டடக்கலையும் நகரமைப்பும்' நூலில் பின்வருமாறு குறிப்பிடுவார்: "மயமதம் கூறும் நகரமைப்புக் கலை இலக்கணப்படி மொத்தச் சுற்றளவில் 20இல் ஒரு பாகம் 'குடும்ப பூமி' என்ற பெயரில் குடியிருப்புக்களுக்கும், பிற பகுதிகள் தோட்டங்கள், நீர் நிலைகள், இளமரக்காக்கள் ஆகியவற்றுக்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவ்விதமாகப் புகழ்பெற்று விளங்கிய வாணிக நகரான பூம்புகார் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புயல் காற்றடித்து வெள்ளப் பெருக்கெடுத்து நீரில் மூழ்கி விட்டதை மணிமேகலை குறிப்பிடுகிறது


மணிமேகலையில் இந்த நகரின் அழிவு இவ்வாறு குறிப்பிடபடுகிறது. அதாவது வருடாவருடம் இந்திர விழா கொண்டாடும் சோழ மன்னன் அந்த ஆண்டு கொண்டாடததால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி நகர் அழிந்ததாக குறிப்பிடுகிறது.

அங்கு கிடைக்கபெற்ற சில தொன்மையான பொருட்களை கொண்டு அங்கு "சிலபதிகார அருங்காட்சியகம்" ஒன்று தொடங்கப்பட்டு, நம் பண்டைய தமிழர்களின் கலாசாரம் இன்னும் பிரதிபலித்து கொண்டுள்ளது. இங்கு ஆராய்சிகள் மேற்கொள்ளபட்டால் இன்னும் பல வெளிவராத நம் பெருமைகள் வெளிவர வாய்ப்புள்ளது. தமிழர்கள் அனைவரும் அங்கு சென்று நம் வரலாற்றை காண வேண்டும்... தமிழர்கள் பற்றிய தேடல் மேலும் தொடரும்...


இப்பதிவு பற்றிய தங்களின் கருத்துக்களை இட்டு செல்லுங்கள்...

நன்றி!!!
ம.ஞானகுரு

Tuesday, August 7, 2012

செவ்வாயில் கால் பதித்த கியூரியாசிட்டி


நாசாவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட "ரோவர்' விண்கலம், எட்டு மாதப் பயணத்துக்கு பின், நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது.
சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த செவ்வாய் கிரகம், பூமியிலிருந்து 57 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. இந்த சிவப்பு நிற கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழல் குறித்து, அமெரிக்காவின் "நாசா' விஞ்ஞானிகள் இது வரை 7 முறை செயற்கை கோள்களை அனுப்பியுள்ளனர்,
 செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக, செவ்வாயில் உயிரினம் வாழ்ந்திருக்கலாம் என்றும் சில தடயங்கள் கிடைத்தன.

இந்த கிரகத்தைப் பற்றி மேலும் ஆராய, கடந்த நவம்பர் மாதம், "ரோவர்' விண்கலம் செலுத்தப்பட்டது; "ரோவர்' விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த, "கியூரியாசிட்டி' என்ற "ரோபோ' வாகனம்,  "பாராசூட்' மூலம் மெதுவாக ஏழு நிமிட முயற்சிக்கு பின், செவ்வாயின் பரப்பைத் தொட்டது.

*ஆறு சக்கரங்களுடன் கூடிய, "கியூரியாசிட்டி' "ரோபோ' வாகனத்தில், செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழல், மண் அமைப்பு உள்ளிட்டவை ஆராயக்கூடிய வசதி உள்ளது.

*செவ்வாயில் பயணம் செய்யும் போது சிதைவுற்றாலோ அல்லது  ரோபோவில் கோளாறுகள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அதை கண்காணிக்க தனி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அவற்றை தானாகவே சரி செய்துகொள்ளும் தன்மையும் கொண்டது.

*செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஓரளவு புரிந்து கொண்ட பின், ஒரு மாதம் கழித்து, செவ்வாயின் மிக பெரிய பள்ளத்தாக்கான "கேலே' பள்ளத்தாக்கில் தரையிறங்கியுள்ள "கியூரியாசிட்டி'  பெரிய டிரில்லர் கொண்டு செவ்வாயின் நிலபரப்பில் துளைஇட்டு அடியில் உள்ள மண்ணை எடுத்து முதலில் ஆய்வுகளை துவங்கும். மண்ணை  ஆராய்ச்சி செய்யும் அணைத்து வசதிகளும் அதில் உள்ளது.

*செவ்வாய் கிரகத்தில் 96 மைல் பரப்பளவில் சுற்றி வந்து, "கியூரியாசிட்டி' ஆய்வுகளைச் செய்யும்.

* புளூடோனியம் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பேட்டரி, இந்த ரோபோவில் உள்ளது.

*கியூரியாசிட்டி அனுப்பும் புகைப்படங்கள் பூமியை வந்தடைய 26 நிமிடங்கள் ஆகும். செவ்வாய் 57 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் ஒளியின் திசைவேகத்தில் அவை வந்தாலே இந்த நேரம் ஆகும். மேலும் கியூரியாசிட்டி 8 மாதம் பயணம் செய்தே செவ்வாயை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது (அடேங்கப்பா!!!!).

*ரோவர் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கும் நிகழ்ச்சி, நியூயார்க்கின், "டைம்ஸ்' சதுக்கத்தில், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது

*250 கோடி டாலர் செலவில் இந்த விண்கலம் தயாரிக்கப்பட்டது, அதாவது ரூ.14 ஆயிரத்து 300 கோடி.

*ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய நாசா விஞ்ஞானிகள் குழுவில் இந்தியர் அமிதாப் கோஷும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும்  கியூரியாசிட்டி எந்த பகுதியில் இறங்க வேண்டும் என்பதை தீர்மானித்தவரும் இவரே.