வேற்றுகிரக வாசிகள் பூமியை அடிக்கடி சந்திரன், செவ்வாய் கிரகங்களில் இருந்து உளவு பார்க்கிறார்கள் (இதை பற்றி என்னுடைய 2012 இல் உலகம் அழியுமா என்ற பதிவில் இதை பற்றி தெளிவாக கூறியிருக்கிறேன்), பூமிக்கு வந்திருக்கிறார்கள், வசிக்கிறார்கள்(இதை பற்றி மேலும் அறிய உலகில் மறைக்கப்படும் உண்மைகள்).
ஆதி காலத்து உலக வரைபடம் வேற்று கிரக வாசிகளின் கூற்று படியே வரையபட்டிருக்கவேண்டும் பூமிக்கு உயர சென்று பார்க்காமல் தெளிவாக துல்லியமாக வரையபட்டிருப்பது அவர்கள் உதவி இன்றி சாத்தியம் இல்லாத ஒன்றே, இன்னும் பல கூற்றுகள் வேற்று கிரக வாசிகள் பற்றி ஆதிகாலத்திலிருந்து இன்று வரை இருந்துகொண்டு தான் இருக்கின்றன. ஆனால் இவை எல்லாம் பொய் என்று கூறுபவர்களும் உண்டு.
இதில் என்னுடைய கருத்து என்னவென்றால் கோடானகோடி நட்சதிரகூட்டங்களை கொண்ட இப்பிரபஞ்சத்தில்
சூரியன் ((பிரபஞ்சம் சூரியன் பூமி பற்றி மேலும் தகவல்களுக்கு என்னுடைய பதிவை படிக்க இங்கே கிளிக் செய்யவும்) ) என்னும் சிறு நட்சத்திரத்தில் உள்ள
(இது போன்று பல படங்கள் உள்ளன பதிவின் நீளம் கருதி குறைதுக்கொள்ளவேண்டியாகிவிட்டது. )
கண்ணுக்கு தெரியாத சிறு சிறு பூமி என்னும் கோளில் மனிதன் என்னும் ஒரு ஏலியன் வாழும் போது இப்பிரபஞ்சத்தில் நம்மை போல் அல்ல நம்மை விட அதியுயர் அறிவு கொண்ட ஏலியன்கள் வாழ்வது சாத்தியமே.
அதற்கு சாட்சியாகவே சமீபத்தில் ஒரு நிகழ்வும் நடந்துள்ளது
பூமியில் இருந்து, 57 கோடி கி.மீ., தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய சூழல் குறித்து ஆராய, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான, "நாசா' சார்பில் "கியூரியாசிட்டி ரோவர்' விண்கலம் அனுப்பப்பட்டது.
(இதை பற்றிய மேலும் தகவல்களுக்கு செவ்வாயில் கால் பதித்த கியூரியாசிட்டி) செவ்வாயின் சுற்றுச்சூழல் அமைப்பு, பாறைகள் மற்றும் மண்ணுக்கு அடியில் ஹைட்ரஜன் அளவு போன்ற பல்வேறு அம்சங்களை ஆராய, 10 உபகரணங்களுடன் கடந்த, 6ம் தேதி செவ்வாயில் தரையிறங்கிய, "கியூரியாசிட்டி' திட்டமிட்டபடி, தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது.
முதல்கட்டமாக, செவ்வாயின் நிலப்பரப்பை பல்வேறு திசைகளில் இருந்து படம் பிடித்து, பூமிக்கு அனுப்பியது.செவ்வாய் கிரகத்தின் அடிவானத்தில், மர்மமான யு.எப்.ஓ., எனப்படும் அடையாளம் காண முடியாத புதிரான பொருள், அங்குமிங்கும் அசைந்தாடுவதை, "கியூரியாசிட்டி' படம் பிடித்துள்ளது.
வேற்று கிரகவாசிகள் தான், செவ்வாயில் மனிதனின் நடவடிக்கைகளை வேவு பார்ப்பதாக, யூ.எப்.ஓ., ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இது, வழக்கமாக கிராபிக் தொழில்நுட்பத்தில் காணப்படும், "டெட் பிக்சல்'கள் என, சில விஞ்ஞானிகள் விளக்கம் தருகின்றனர்.வேற்று கிரகவாசிகள் மற்றும் விண்வெளியில் உள்ள அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பொருட்கள் குறித்து ஆய்வு செய்து வரும், பிரிட்டனைச் சேர்ந்த, "அலீன் டிஸ்க்ளோசர்' அமைப்பின் ஸ்டீபன் ஹன்னார்டு என்பவர்,
சமீபத்தில், "கியூரியாசிட்டி' அனுப்பிய படத்தில், செவ்வாயின் அடிவானத்தில் அடையாளம் காண முடியாத, பறக்கும் தட்டு போன்ற ஒரு மர்மப் பொருள், வெள்ளை நிறத்தில் அங்குமிங்கும் பறந்து திரிவதை ஹன்னார்டு கண்டுபிடித்துள்ளார்.அவர் கூறுகையில்,
""கியூரியாசிட்டி' அனுப்பிய வீடியோவில், செவ்வாய் கிரகத்து வானில் நான்கு பொருட்களை காண முடிகிறது. செவ்வாயில், புவிகிரகவாசிகளின் நடவடிக்கைகளை வேற்று கிரக சக்திகள், பறக்கும் தட்டுகளின் மூலம் வேவு பார்ப்பதையே "கியூரியாசிட்டி'யின் வீடியோ பதிவுகள் காட்டுவதாக, யூ.எப்.ஓ., ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. கியூரியாசிட்டி அனுப்பியிருக்கும் மர்ம பொருள் வேற்றுகிரகவாசிகளின் வேவு கப்பல்களாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆக மனிதனோடு பஞ்சாயத்துக்கு மல்லுக்கட்ட வேற்றுக்கிரகவாசிகள் தயாராகிவிட்டார்களோ?
கியூரியாசிட்டி ரோவர் பற்றி மேலும் சில தகவல்கள்:
*செவ்வாயில் தரையிறங்கிய இடத்தில் இருந்து, ஆறு மீட்டர் தூரத்துக்கு, "கியூரியாசிட்டி ரோவர்' நகர்ந்து சென்று, ஆய்வுகளை செய்துள்ளது
*ஒரு டன் எடை கொண்ட இந்த கியூரியாசிட்டி விண்கலம்தான் இதுவரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப்பட்ட விண்கலங்களிலேயே பெரியதாகும்.
* 8 மாத கால பயணத்தை முடித்து பத்திரமாக செவ்வாய் கிரகத்தில் லேண்ட் ஆகியுள்ள இந்த விண்கலம் அடுத்த 2 ஆண்டு காலத்திற்கு செவ்வாய் கிரகத்தை அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து அனுப்பப்போகும் படங்களும், வீடியோக்களும், ஆய்வுத் தகவல்களும் மனித குலத்தை மாற்றிப் போடப் போகும் முக்கிய விஷயமாகும்.
* 2030 ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை ஏற்கனவே அமெரிக்கா அறிவித்துள்ளது. அதற்கான திட்டமிடல்களும், ஆய்வுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. எனவே கியூரியாசிட்டி தரப் போகும் தகவல்கள் மிகுந்த ஆர்வத்தையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன.
* செவ்வாய் கிரகத்தில் இறங்கியபோது தனது நிழல் கிரகத்தின் தரையில் படிந்ததை படம் எடுத்து அனுப்பியுள்ளது கியூரியாசிட்டி. இது அந்த விண்கலத்தின் நிழல் அல்ல, மாறாக மனித குலத்தின் சாதனை நிழல் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
* ஏற்கனவே மார்ஸ் ஸ்பிரிட், ஆப்பர்சூனிட்டி என இரு விண்கலங்களை செவ்வாய்க்கு நாசா அனுப்பியுள்ளது
மறக்காமல் கருத்துக்களை இட்டு செல்லுங்கள்
இது என்னுடைய 50 வது பதிவு....
23,780 page views & 26 followers பெற்றுள்ளேன்...
எனது அணைத்து பதிவுகளுக்கும் நல்ல வரவேற்பு தந்த நண்பர்களுக்கு நன்றி .
நன்றி!!!
ம.ஞானகுரு
10 comments:
வாழ்த்துக்கள் நன்பா...நல்ல பதிவுகளை உன்னிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்.
realy very nice post
ungalathu vetri payanamthodara vallathukkal.
வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் வெற்றி தொடரட்டும்
Suprb.....aam ithu manithargaluku kidaitha vettri...nandri
Thanks for your useful
post.
Thanks for your useful
post.
இது. போன்ற. அறிவியல் பதிவகளை வெளியிடவும்
thanks for your post
THANKS FOR YOUR POST , IT IS MOST USEFUL FOR EVERYONE TO LEARN THE PAST
Post a Comment