Friday, July 22, 2011

நம் சூரிய குடும்பத்தின் கதை

சூரியன் (sun)

நம் தலைவர் ஒரு சூப்பர் ஸ்டார்.

வயது 500 கோடி ஆண்டுகள் இன்னும் 700 கோடி ஆண்டுகள் உயிருடன் இருக்கலாம்.

நம் பூமியை விட 13 லட்சம் மடங்கு பெரியவர். 9.8 கோடி மைல் தூரத்தில் இருக்கிறார் .

நம் தலைவரின் மேற் புற வெப்பம் 6000 டிகிரி கெல்வின். தினமும் நம் சூரியன் சாப்பிடும் உணவு 39,744 தன் ஹைட்ரோஜென் அணுக்கள். அவை இணைந்து ஹீலேயும் ஆகிறது.



வியாழன்:(jupiter)

நம் சூரிய குடும்பத்திலேயே பெரியவர் ஒரு தராசில் ஒரு பக்கம் வியாழனையும் மறு பக்கம் மற்ற 8 கோள்களையும் வைத்தல் கூட அவை வியாழனின் எடைக்கு நிகர் ஆக முடியாது.
நம் பூமியை விட 318 மடங்கு பெரியவர்.


ஆனாலும் தன்னை தானே சுற்றி கொள்ள 9.9 மணி நேரமும் , சூரியனை சுற்றி வர 11.86 வருடமும் எடுத்து கொள்கிறார்

வியாழனுக்கு 16 துணை கோள்கள் உள்ளன . அவற்றில் 4 மிக பெரியது

jupiter compared to earth:




புதன்:(mercury)
சூரியனுக்கு மிக அருகில் உள்ளவர் சூரியனை 87 .97 நாட்களில் சுற்றி வந்து விடுகிறார்

ஆனால் தன்னை தானே சுற்றி கொள்ள 5 நாட்கள் எடுத்துகொள்கிறார் பூமியை ய விட 3 மடங்கு சிறியவர்.





வெள்ளி:(venus)


அடுத்து நாம் பார்க்க இருப்பது நம் அண்டை வீட்டார் வெள்ளி அவர்கள்.

இவர் தன்னை தானே 243 நாட்களில் சுற்றி கொள்கிறார் அனால் சூரியனை 227 .4 நாட்களில் சுற்றி விடுகிறார்.

அதாவது அவருக்கு ஒரு நாள் என்பது ஒரு வருடத்தை விட அதிகம்






செவ்வாய்(mars)
அடுத்து நாம் காண இருப்பவர் செவ்வாய் அவர்கள்
இவர் மிகவும் அழகானவர்,


சிவப்பாக தோன்றுகிறார் இதர கிரகங்களுடன் ஒப்பிடும் போது மனிதன் போய் குடியேற வாய்ப்புகள் அதிகம்
இவர் தன்னை தானே சுற்றி கொள்ள 10 மணி நேரமும் சூரியனை சுற்றி வர 29 .5 ஆண்டுகளும் ஆகின்றன

earth, mars and moon:




சனி(saturn):
வியாழனுக்கு அடுத்து நம் குடும்பத்தில் பெரியவர் இவர் .

வெப்ப நிலை -285 டிகிரி சனி கிரகத்தில் பருவ நிலை 7 .5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுகிறது .

தற்போது அறிந்த வரை இவருக்கு 23 துணை கோள்கள் உள்ளன

இவருடைய ஒரு துணை கோளான தைடனில் (titan) சில நுண் உயிரிகள் வாழ கூடும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்







uranus:
அடுத்த நம் சூரிய குடும்ப உறுப்பினர் நம் uranus அவர்கள்

� பூமியை விட 15 மடங்கு பெரியவர்.

இவர் சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்து கொள்ளும் காலம் 84 ஆண்டுகள். 6.81
கி.மீ./விநாடி வேகம்

இவருக்கு 20 துணை கோள்கள் உள்ளன

இவருக்கு எடை இல்லை




நெப்டியூன்

இவர் சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்து கொள்ளும் காலம் 160 ஆண்டுகள் 5 .43 கி.மீ./விநாடி வேகம்

இவருக்கு 13 துணை கோள்கள் உள்ளன

நேப்டியுனை உங்களிடம் தரமான பயினகுளர் இருந்து மெகா மூடம் இல்லாதிருந்து
உங்களுக்கு பொறுமையும் இருந்தால் உங்கள் வீடு மாடியில் இருந்தே பார்க்கலாம்





ப்ளுட்டோ
இவர் தன நம் சூரிய குடும்பத்திலேயே மிகவும் தூரத்தில் உள்ளவர் மற்றும் மிகவும் சிறியவர்
இவர் சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்து கொள்ளும் காலம் 250 ஆண்டுகள் 4 .7கி.மீ./விநாடி வேகம்

1930 இல் கண்டறிய பட்டது

நேப்டியுனும், யுரனுசும் ஒழுங்கான நீள் வட்ட பாதையில் சுற்றுகின்றன என்பதே அடுத்து ஒரு கிரகமும் அதற்கு ஈர்ப்பு விசையும் உள்ளது என்பதற்கு சாட்சி.

அதே போல் இதுவும் நீள் வட்ட பாதையில் சுற்றி வருவதால்
அடுத்தும் ஒரு x கிரகம் இருக்கலாம் அனால் இன்னும் கண்டறிய படவில்லை

இருபினும் நிறைய பெரியதும் சிறியதுமான பொருட்கள் சுற்றி வந்து கொண்டு தான் இருக்கின்றன புளுடோ வுக்கு அப்பால்







பூமி மற்றும் நிலா :
பூமி மற்றும் நிலா வை பற்றி அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம்

சூரிய குடும்பம்:







( இது என்னுடைய முதல் பதிவு திருத்தங்கள் இருந்தால் கமெண்ட் இல் சொல்லவும்
தங்கள் வருகைக்கு நன்றி )

8 comments:

Unknown said...

நல்ல தகவல் குரு சார்.உங்களுக்கு ஒன்று சொல்ல விருப்பம் வாழ்த்துக்கள் உங்கள் முதல் பதிவிற்கு நீங்கள் copy image பயன்படுத்த வேண்டாம் இமேஜை save செய்து upload செய்தல் வேண்டும் அப்போதுதான் படங்கள் சரியாக அமையும்.மேலும் அறிய bloggernanban.blogspot .com தளத்திற்கு செல்லவும் என் தளத்தை பார்வை இட்டு உங்களுக்கு தேவையான உதவியை கேட்கவும்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அற்புத படைப்பு..
சிலிர்க்க வைக்கும் அபூர்வ படங்கள...


தெரிந்துகொள்ள வேண்டிய அற்புத தகவல்..
பகிர்வுக்கு மிக்க நன்றி..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////
இது என்னுடைய முதல் பதிவு திருத்தங்கள் இருந்தால் கமெண்ட் இல் சொல்லவும்
தங்கள் வருகைக்கு நன்றி//////



திருத்தங்கள் ஒன்று மில்லை...

படங்களை பெரிய படங்களாக இடாமல் பதிவின் அளவுக்குள் சுருங்கி வரும் படி பதிவிடுங்கள்...

Unknown said...

சன் எதிராக பூமியில் ரஜினி சுற்றி சுழல்கிறது.
http://bit.ly/n9GwsR

சமுத்ரா said...

good one

Unknown said...

முதல் பதிவே அட்டகாசம இருக்கு ........வாழ்த்துகள்

Vijayan Durai said...

மிகவும் அருமை நன்பா!
பயனுள்ள தகவல்..

Anonymous said...

humam being are made up of clay?nasa ames research centre prove it that.so human being are not come from monkey.if any doubt search it.next sun have many spot so the become darken after 2025 scientist prove it?