Wednesday, August 17, 2011

பிரபஞ்சம்-1 (universe-galaxies)



அண்டங்கள் (galaxies)




வானத்தில் பரவிக்கிடக்கும் நட்சத்திரங்களின் தொகுப்பே உடுமண்டலங்கள் அல்லது அண்டங்கள் அல்லது galaxy ஆகும்.நட்சத்திரங்கள் என்றால் ஒன்றல்ல, இரண்டல்ல, ஆயிரமல்ல, லட்சக்கணக்கான நட்சத்திரங்களின் தொகுப்பே galaxy ஆகும்
நமது galaxy ஆகாய கங்கை அல்லது பால் வெளி வீதி (milky way galaxy) என்றலைக்கப்படுகிறது.

இவற்றின் பரப்பு சில ஆயிரங்களிலிருந்து சில லட்சம் ஒளி ஆண்டுகள் வரை இருக்கலாம் . இவற்றின் நிறை பல மில்லியன் / ட்ரில்லியன் சூரியக்குடும்பங்களின் நிறை அளவுக்கு இருக்கும் ஒரு உடுமண்டலதுக்கும் மற்றொரு உடுமண்டலதுக்கும் இடையே பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரம் இருக்கும்

நாம் இருப்பது ஒரு மாபெரும் சுருள் மண்டலத்தில் (spiral galaxy). இதன் விட்டம் ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் இருக்ககூடும். அனால் நம்மருகே இருக்கும் ஆண்டிறோமேடா உடுமண்டலம் 2 .3 ஒளிஆண்டுகள் விட்டம் கொண்டது



உடுமண்டலங்கள் தான் அமைப்பை பொருத்து 4 வகையாக பிரிக்கப்படுகிறது

1 .சுருள் வடிவ உடுமண்டலம்: (spiral galaxies)



2 . லேண்டிகளர் உடுமண்டலம்: (lenticular galaxies)
இதுவும் ஒரு வகையான சுருள் வடிவ உடுமண்டலம் தான் ஆனால் சுருளை உருவாக்கும் நடுப்பகுதி வேகமிழந்து
எரிபொருள் தீர்ந்து விட்டதால் இப்படி அழைக்கின்றனர் இவை காலத்தால் பழையவை மேலும் இவற்றின் அருகில் ஈர்ப்பு சக்தி அதிக முடைய வேறொரு உடுமண்டலம் இல்லாதிருக்க கூடும்
(இது அண்டங்களுக்கு மட்டுமல்ல நமக்கும் பொருந்தும்)



3 . நீள்வடிவ உடுமண்டலம் : (eleptical galaxies )
இவ்வுடுமண்டலங்கள் தன்னை தானே சுற்றி கொள்ளாததால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன, இருந்த போதிலும் இவற்றில் உள்ள கோள்கள் நட்சத்திரங்கள் சுற்றி கொண்டுதான் இருக்கும் மொத உடுமண்டலமும் சுற்றுவதில்லை


4 . வடிவமற்ற உடுமண்டலங்கள் (irregular galaxies)
இவை ஒழுங்கான உருவமில்லாதவை விநோதமானவை ஆயரக்கனக்கான வினோத வடிவம் கொண்ட உடுமண்டலங்கள் இருக்கின்றன



நீங்கள் பார்க்கும் இந்த உடுமண்டலம் இணைந்து இன்னும் சில பில்லியன் ஆண்டுகளில் ஒரே உடுமண்டலமாக மாறிவிடும்
நீங்கள் பார்க்கும் இந்த 2 உடுமண்டலங்களும் உள்ள சண்டையை கண்டுகளியுங்கள். இதில் ஒருவர் இன்னொருவரை இல்லுக்க முயற்சிக்குரர் 200௦௦ மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறை யாரோ வெற்றி பெருகிரர்கலாம்
இத்தனை உடுமண்டலங்களை பார்த்து விட்டு நம் பால் வெளி அண்டத்தை பார்க்காமல் போனால் எப்படி இது நம் சூரிய குடும்பம் இருக்கும் பால் வெளி அண்டம்



நமது சூரியன் இருக்கும் இடத்தை குறித்திருக்கிறார்கள் கவலைப்படதிர்கள் நீங்களும் நானும் இந்த புள்ளியில் புள்ளியில் புள்ளியல் புள்ளியில் புள்ளியாய் ................. இருக்கொறோம் .
இனி பால் வெளி அண்டத்தின் இயல்புகளை பாப்போம் :
விட்டம்: 90000 ஒளி ஆண்டுகள்
நட்சத்திரங்களின் எண்ணிக்கை : 200 பில்லியன் ( இருக்கும், இருக்கலாம் நான் எண்ணி பார்கவில்லை )
மொத நிறை : ௧ டிரில்லியன் சூரிய நிறை



நமது சூரியனுக்கும் மையத்துக்கும் உள்ள தூரம் : 26000 ௦ ஒளிஆண்டுகள்
சூரியன் உடுமண்டலத்தை சுற்றி வரும் வேகம் : ரொம்ப இல்ல 220 கிலோமீட்டர் / விநாடி
சூரியனின் ஒரு ஆண்டு : 225 மில்லியன் ஆண்டுகள் (அதாவது ஒரு முறை உடுமண்டலத்தை சுற்ற எடுத்து கொள்ளும் கால அளவு )




(1 ஒளியாண்டு என்பது ஒளியின் திசை வேகத்தில் ஒரு பொருள் 1 வருடத்திற்கு பயணம் செய்யும் தூரம் ஆகும்)

(புதிதாக படிப்பவர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்துவிட்டு படிக்கவும் அப்பொழுது முழுமையான தெளிவு பெற முடியும்)

(நன்றி நண்பர்களே அடுத்த பதிவு பிரபஞ்சம் universe இந்த பிரபஞ்சம் , உயிர்கள், பொருட்கள் எல்லாம் எவ்வாறு தோன்றின என்பதை பார்க்கலாம் முக்கியமான பதிவு aug 20 இரவு பதிவு இடப்படும்)

4 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

அறிவுபூர்வமான பதிவு!!!!!!

தொடர்க

வாழ்த்துக்கள்.

ம.ஞானகுரு said...

nandri

hussain5000 said...

Very nice information, we expect more from you.

ஸ்ரீதர் said...

பயனுள்ள அறிவியல் பதிவு.வாழ்த்துக்கள்!நேரமிருந்தால் நம்ம பக்கம் கொஞ்சம் வந்துட்டு போங்க!