"வர்மம்”
ஆதி தமிழன் படைத்த அற்புத கலைகளில் ஒன்று இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இக்கலை தமிழ்நாடு, தமிழ் ஈழம், கேரளா, தற்கால ஆந்திராவின் கிழக்கு பகுதிஇல் பரவி இருந்தது, இக்கலை சிதமருதுவதை துணையாக கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.
இக்கலையை படைத்தவர் சித்தர்களில் சிறந்தவரான அகத்தியர். இது உருவான இடம் பொதிகை மலை (தற்போதைய குற்றால மலை)."தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே" என்ற கி. மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலை சுவடிகளின் வரியே இதற்க்கு சாட்சி.
அகத்தியர் கற்பித்த வர்ம கலைகளில்
"அகஸ்தியர் வர்ம திறவுகோல்"
"அகஸ்தியர் வர்ம கண்டி"
"அகஸ்தியர் ஊசி முறை வர்மம்"
"அகஸ்தியர் வசி வர்மம்"
"அகஸ்தியர் வர்ம கண்ணாடி"
"அகஸ்தியர் வர்ம வரிசை"
"அகஸ்தியர் மெய் தீண்டா கலை"
ஆகியவை குறிப்பிடத்தக்கவை
" ஜடாவர்மன் பாண்டியன்" என்ற பாண்டிய மன்னன் இக்கலையில் சிறந்து விளங்கினான் பின்னர் பாண்டிய இனம் அழிய தொடங்கியதும் இக்கலையும் அழிய தொடங்கியது. பின்னர் வந்த சோழர்கள் இதை கற்றனர். பின்னர் இந்த கலை இலங்கை சீன போன்ற நாடுகளில் பரவ தொடங்கியது.
காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி சீனாவில் இக்கலையை பரப்பினார். Tenjiku Naranokaku என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "The fighting techniques to train the body from India " என்ற பொருளை தருகின்றது.
இக்கலையானது அனைவருக்கும் கற்றுதரபடமாட்டாது. இதன் ஆசிரியர் தன மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்கவழக்கங்களை அறிந்த பின்னரே கற்று தருவார். இக்கலை மூலம் ஒருவர் தாக்கபட்டால் அதற்கென்று தனியாக உள்ள சிகிச்சை முறையை பயன்படுத்தியே சரிசெய்யமுடியும் என "அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே" என்ற வரிகள் விளக்குகின்றன
உலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக் கலை என்பதை அறியும் போது, செந்தமிழ்ப் பரம்பரையின் ஒவ்வோர் உயிரும் உச்சத்தில் நிற்கிறது. சித்தர் பெருமக்களின் தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை, யுகம் யுகமாக நம் மூதாதையர்கள் ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த உண்மைகளின் தொகுப்பாகும். தமிழனுக்குச் சொந்தமான இந்த அரிய கலையின் அற்புதப் பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே பெருமளவில் அறியாதிருப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இன்னொரு புறம், வர்மக்கலை நடைமுறைக்கு ஒவ்வாத பழங்கலை என்றெல்லாம் தமிழ் மக்களே கேலிபேசிக் கொண்டிருப்பது மேலும் வேதனையாக இருக்கிறது. அதன் வெளிபாடே இந்த பதிவு.
நமது வர்ம கலை பரவிய நாடுகள்:
வர்மமும் கிரேக்கமும்!
கிரேக்கமும், திராவிடமும் பழங்காலத்தில் கடல்வழித் தொடர்புகளால் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், பல தமிழ்ச் சொற்களைக் கிரேக்கம் உள்வாங்கிக் கொண்டது என்பது காலச் சுவடிகளில் காணும் பதிவு. அப்படி கிரேக்கம் உள்வாங்கிக் கொண்ட எத்தனையோ தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் “வர்மம்”. “வர்மம்” என்ற சொல் கிரேக்கத்தில் “Pharmos” ஆகி, ஆங்கிலத்தில் “Pharmacy” என்ற மருத்துவச் சொல்லாக வழங்கி வருகிறது.
“வ” என்பதில் இருக்கும் “ஏ” உச்சரிப்பு, மேனாட்டு மொழிகளின் புணரியல் இலக்கண (Declension) மரபுகளின்படி “கு” ஓசையைத் தழுவுகின்றது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. “Five” என்ற சொல் “Fifty” என மாறும் போதும், “Leave” என்ற நிகழ்காலச் சொல் “Left” என்ற இறந்தகாலச் சொல்லாக மாறும் போதும் “V” ஓசையானது “F” ஓசையாக மாறியிருப்பது காண்க. அவ்வண்ணமே Varma-வும் Pharma ஆயிற்று.
தூரக் கிழக்கு நாடுகளில் “வர்மம்”!
இதர மொழியினர்க்கு “வர்மம்” என்ற சொல்லை வழங்கிய தமிழ் இனம். வர்மக் கலையையும் வழங்கியிருக்கிறது. “தெற்கன் களரி” என்னும் பெயரால் அறியப்படும் திராவிடர்களின் இந்த வர்மக் கலைதான் சீனம் வரை சென்றது என்பதற்குச் சரித்திர ஆதாரங்கள் உள்ளன(போதி தர்மர்- பின்னர் விளக்கமாக பார்க்கலாம்).
தொலைகிழக்கு நாடுகளில் பௌத்தம் பரவிய வேகத்தில், தமிழனின் வர்மக் கலையும் கூடவே பயணம் சென்று வேறு வேறு வடிவங்களில் வளர்ச்சி கண்டுப் பொலிவடைந்தன என்பதைத் தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர்.
சீனாவில் வேரூன்றியிருக்கும் குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத் தூரக்கிழக்கு நாடுகளின் தற்காப்புக்கலைப் பிரிவுகளான ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது தமிழனின் களரிதான் என்பதற்குச் சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள் வைத்திருக்கின்றது. இந்தச் சாட்சியங்கள் யாவும் மூத்த தமிழ்க்குடியின் புகழை முரசறைந்து நிற்கும் சத்தியங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
வர்ம கலையை அகத்தியர் நான்கு பிரிவுகளாக பிரிக்கிறார் அவை:
தொடு வர்மம்:
இது பலமாக தாக்க படுவதன் மூலம் ஏற்படுகிறது. இதை எளிதில் குனபடுத்த முடியும்
தட்டு வர்மம்:
இது ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாமல் மிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும், நான் ஏற்கனவே கூறியவாறு இம்முறையில் தக்கபடுபவரை இதற்க்கு உரிய தனியான சிகிச்சை முறையில் மட்டுமே குனபடுத்த முடியும்
நோக்கு வர்மம்:
பார்வை ஒரே இடத்தில செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். இந்த முறை ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். நோக்கு வர்மம் முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகர் உலகில் எவரும் இல்லை என குறிப்பிடுகிறார்
படு வர்மம் :
நான்கு வகை வர்மங்களில் அபாயகரமானது இதுவே, உடலில் உள்ள வர்ம பகுதிகளில் அடியோ தாக்குதலோ ஏற்படுத்தினால் அதுவே படு வர்ம ஆகும். இத்தாக்குதலுக்கு ஆளானவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்
ஒரு மனிதன் படுவர்மா புள்ளிகளில் அடிபட்டால் உடனே மயங்கி விழுவான் என்று, வாயில் நுரை தள்ளி நாக்கு வெளியே தள்ளும் என்றும், அடிபட்ட இடம் குளிர்ச்சியாக என்றும் குறிப்பிடுகிறார் எல்லோராலையும் இதை செய்து விடமுடியாது. மிகுந்த பயிற்சி உள்ளவரால் மட்டுமே இது இயலும்.
உடலில் உள்ள முக்கியமான வர்ம புள்ளிகளை பட்டியலிடுகிறார் அவை:
தலை பகுதியில் முக்கியமான 37 வர்ம புள்ளிகளும்
நெஞ்சு பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்
உடலின் முன் பகுதியில் 15 வர்ம புள்ளிகளும்
முதுகு பகுதியில் 10 வர்ம புள்ளிகளும்
கைகளின் முன் பகுதியில் 9 வர்ம புள்ளிகளும்
கைகளின் பின் பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்
கால்களின் முன் பகுதியில் 19 வர்ம புள்ளிகளும்
கால்களின் பின் பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்
கீழ் முதுகு பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்
இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்...
வர்மத்தின் அதிசயங்கள் !!
வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்
ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.
வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.
ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.
ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.
நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும்.
மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.
மேற்கூறிய உண்மைகளைச் சிலர் நம்ப மறுக்கலாம். நக்கல் புரியலாம். ஆனால் வர்மக் கலையின் அரிச்சுவடிகளையேனும் அறிய நேரிடுபவர்க்கு அங்ஙனம் மறுக்கவோ நகைக்கவோ இயலாது என்பது திண்ணம். வர்மத்தின் அதிசயங்களை அறிவார் மட்டுமே அறிவார்.
அறிவியல் பதிவுகளாய் எழுதி வந்த நான் முதன் முதலாக வரலாற்று சம்பந்தமான பதிவை எழுதுகிறேன், வார்த்தை நடை, வரிகளின் கோர்வையில் பிழைகள் இருந்தால் தங்களின் கருத்துகளை வரவேற்கிறேன் கமெண்ட் இல் சொல்லுங்கள்.
நன்றி!!!
ம.ஞானகுரு
10 comments:
unkal world end postkalai muluvathum padithen... supper... naan oru karathe Black belt(2nd) ... naan pothi tharmarai mihavum mathipavan (7m arivu padathukku munpe) unkal adutha pathivukku kathirukiren...(I am a SriLankan)....
நல்ல தலைப்பு, நல்ல ஆரம்பம். ஒவ்வொரு பதிவையும் மிக ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
கற்றுக்கொடுக்காமலேயே அழிந்த கலைகளில் ஒன்று வர்மம். இப்போது வர்மம் தெரிந்தவர் இந்தியாவில் யாருமில்லை என்று தான் சொல்ல தோன்றும். அப்படியே தெரிந்தாலும் அதை அவர் கண்டிப்பாக சொல்லிக்கொடுக்க மாட்டார். எல்லாம் சரி ஆனால் கராத்தே, குங்பூ தெரிந்தவரை வர்மம் தெரிந்தவரால் ஒன்றும் செய்ய முடியாது. நெருங்கும் முன்னரே அடித்து வீழ்த்தி விடுவார்கள்.
பல வலைதளங்களில் இருந்து நல்ல காப்பி பேஸ்ட் செய்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
Dear Friends,
You can learn varmam therapy and also we can refer a good teachers who can teach varmam defence system. More details mail back on http://siddhabooks.com or http://varmakalparemedy.com
Dear Mr Raashid Ahamed,
You said complete wrong, those who now varma, nobody beat him even kung fu, karate. so we are not accept your comments.
ஐயா நான் சேலத்தில் வசிப்பவர் நான் நம் பண்டைய கலைகலை கற்க நினைக்கிறேன் அதற்க்கான புத்தகம் இருப்பின் எனக்கு கிடைக்குமா கிடைத்தால் எனது வாட்ஸ்அப் என் 9092809787 என்ற எனனிற்க்கு அனுப்பவும்
காராத்தே குங்புகளைவிட இங்கே களரிபயிட்டு,எடுத்தெறி,அடிமுறை என பல தற்காப்புக் கலைக்கெல்லாம் தாய்க்கலை தமிழன் கலை...
நீங்கள் சொல்வது தவறு ....கராத்தே, குங்பு தெரித்தவர்கள் வர்மம் அறிந்தவரை நெருங்க முடியாது...மெய்தீண்டா கால வர்மத்தின் மூலம் அவர்களின் ஆற்றலை உறிஞ்சி நிலை குலைய செய்திடுவார்கள்...ஒன்று வீழ்ந்திடுவார்கள் இல்லையென்றால் மூளை குழம்பி நாம் எதற்கு இங்கு வந்தோம் என்று நிலை குலைந்து நிர்பார்கள்....அங்கு அ உ அ வும் வேலை செய்யாது, கொய்யாம் கொய்யாவும் வேலை செய்யாது...உண்மையில் வர்மம் ஒரு அதிசயம்...
அற்புதமான அறிமுகம்
Post a Comment