Wednesday, August 1, 2012

உலகின் மிக பெரிய மின்தடை


               நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வட கிழக்குப் பகுதிகளில் உள்ள மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும், மின் தொகுப்புகளில், நேற்று ஒரே நேரத்தில் கோளாறு ஏற்பட்டதால், டில்லி, மேற்கு வங்கம் உட்பட, 22 மாநிலங்கள் இருளில் மூழ்கின. நாட்டில் உள்ள, 60 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
                 நாடு முழுவதும் உள்ள மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அந்தந்த பிராந்தியங்களில் அமைக்கப்பட்டுள்ள மின் தொகுப்புகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து, ஒவ்வொரு மாநிலத்துக்கும், குறிப்பிட்ட அளவுகளில் பிரித்து வினியோகிக்கப்படுகிறது.

                 மின்சாரத்தை பிரித்து அனுப்பும் பணியை செய்வதற்காக, நாட்டில், வடக்கு, கிழக்கு, வட கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு ஆகிய மின் தொகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், தெற்கு மின் தொகுப்பைத் தவிர, மற்ற மின் தொகுப்புகள், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம், வட மாநிலங்களுக்கு மின்சாரம் அளிக்கும், வடக்கு மின் தொகுப்பில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால், டில்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் இருளில் மூழ்கின.

 மின்தடையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் விவரம்: 

வடக்கு மண்டலம்: பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் சண்டிகர்.

கிழக்கு மண்டலம்: மேற்கு வங்கம், சட்டீஸ்கர், பீகார், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் சிக்கிம்.

வடகிழக்கு மண்டலம்: அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், திரிபுரா.

.மெட்ரோ ரயில் சேவை முடங்கியது
                    டெல்லி, கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் சேவை 2 மணி நேரம் முடங்கியது. . ரயில்கள் ஆங்காங்கே பாதியில் நின்றன. சுரங்கப்பாதைகளில் ரயில் நின்றதால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். எமர்ஜென்சி மின்சார சப்ளையை பயன்படுத்தி. பாதி வழியில் நின்ற ரயில்கள் அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. 2 மணி நேரத்துக்கு பிறகே மெட்ரோ ரயில் மின் சப்ளை சீரானது.

நடுவழியில் நின்ற 300 ரயில்கள்
                   ஒரே நேரத்தில் 3 மின்தொகுப்புகள் முடங்கியதால் வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் மின்சாரம் அடியோடு தடைபட்டது. இந்த மின்சார தடை காரணமாக வடக்கு ரயில்வே, வடக்கு மத்திய ரயில்வே, மேற்கு மத்திய ரயில்வே, கிழக்கு மத்திய ரயில்வே, கிழக்கு ரயில்வே மற்றும் தென் கிழக்கு ரயில்வே கடுமையாக பாதிக்கப்பட்டது. மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டதால் ரயில்கள் நடுவழியில் நின்றுவிட்டன.

                     ராஜதானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட ரயில்கள் நடுவழியில் நின்றன   நீண்ட தூர ரயில்களில் பயணம் செய்தவர்கள் உணவு, குடிநீரின்றி அவதிப்பட்டனர்.

சுரங்கங்களில் தொழிலாளர்கள் தவிப்பு
                     திடீர் மின்தடை காரணமாக மேற்கு வங்காளத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நிருபர்களிடம் கூறுகையில், ''பர்த்வான் மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். சுரங்கத்தில் இருக்கும் அவர்கள் அங்கிருந்து மேலே வருவதற்கு லிப்ட்கள் பயன்படுகின்றன. மின்சாரம் இல்லாததால் லிப்ட்கள் இயங்கவில்லை. இதனால், நூற்றுக்கணக்கான சுரங்க தொழிலாளர்கள் சிக்கி தவிக்கின்றனர். மின்சப்ளையை சீராக்கி அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.


சிக்னல்கள் இயங்காததால் போக்குவரத்து நெரிசல்
                   திடீர் மின் தடை காரணமாக டெல்லியில் போக்குவரத்து சிக்னல்கள் இயங்கவில்லை. இதனால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் சிரமப்பட்டனர். 400க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் களமிறக்கப்பட்டனர். ஆனாலும், நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

.காரணம் என்ன?
              ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், உ.பி., உள்ளிட்ட மாநிலங்கள், தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிக அளவு மின்சாரத்தை, மின் தொகுப்புகளில் இருந்து எடுத்துக் கொண்டதே, நேற்றைய பிரச்னைக்கு காரணம் என, தெரியவந்துள்ளது. குறிப்பாக, கிழக்கு மின் தொகுப்பிலிருந்து, அனுமதிக்கப்பட்ட அளவை விட, கூடுதலாக 3,000 மெகாவாட் மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், அடுத்தடுத்த மின் தொகுப்புகளில் ஏற்பட்ட கோளாறு, 22 மாநிலங்கள் இருளில் மூழ்க காரணமாக ஆகி விட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


* நேற்று ஏற்பட்ட மின்சார துண்டிப்பு, உலகில் இதுவரை நடந்த மின் துண்டிப்புகளில், மிகப் பெரிய அளவிலானது என, மின்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

* இந்தியாவை பொறுத்தவரை, ஒரே நேரத்தில், மூன்று மின் தொகுப்புகளில், அடுத்தடுத்து கோளாறு ஏற்படுவது, இதுவே முதல் முறை.

* வடக்கு, கிழக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் உள்ள மின் தொகுப்புகள், 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கொண்டு செல்லும் திறன் கொண்டவை.

* உ.பி., பீகார், பஞ்சாப் ஆகிய மாநில அரசுகள், தங்களுக்கு அனுமதிக்கபட்ட அளவை விட, அதிகமான மின்சாரத்தை, மின் தொகுப்பில் இருந்து எடுக்கவில்லை என, மறுத்துள்ளன.

*மத்திய டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் விவிஐபிகளின் வீடுகளில் மின் தடை ஏற்பட்டது. இதை சமாளிக்க பூட்டானில் இருந்து நீர் மின்னுற்பத்தி திட்டம் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை அவசரமாக பெற்றனர். ஏறக்குறைய 2 மணி நேர மின்தடைக்குப் பிறகு பிரதமர் இல்லத்தில் மீண்டும் மின்சாரம் வந்தது.

*இந்தியா முழுவதும் மின் தடை ஏற்பட்டாலும் மும்பையில் பாதிப்பு இருக்காது. குறிப்பாக தெற்கு மும்பையில். அங்குதான் பங்குச் சந்தை, சர்வதேச விமான நிலையம், உயர் நீதிமன்றம், கவர்னர், அமைச்சர்கள் என விஐபிகளின் வீடுகள் இருக்கின்றன.

மேற்கு மின் தொகுப்பில் மும்பை இணைந்துள்ளது. அதில் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அதிலிருந்து விலகி, வேறு மின் சப்ளை மூலம் மும்பை இயங்கத் தொடங்கும். அதற்கேற்ப அங்கு வசதி செய்யப்பட்டுள்ளது. டாடா பவர் நிறுவனம் இந்த வசதியை அளித்துள்ளது. இதேபோல் டெல்லியிலும் வசதி ஏற்படுத்த வேண்டும் என டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கோரியுள்ளார்.


இதுவரை உலகில் ஏற்பட்ட மிக பெரிய மின்தடைகள்:
July 31, 2012: வடஇந்தியா முழுவதிலும் 22 மாநிலங்களில் மின்தடை ஏற்பட்டது. ஏறத்தாழ 600 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.  உலகிலேயே மிக பெரிய மின் தடை என்ற பெயரும் பெற்றது.

July 30, 2012: வடைண்டியாவிற்கு மின்சாரம் வழங்கும் வடக்கு பவர்  செயலிழந்தது, 8 மாநிலங்களில் மின்தடை ஏற்பட்டது. 370 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

Nov. 10, 2009: Paraguay-Brazil எல்லையில் உள்ள நீர் மின் நிலையத்தை புயல் தாக்கியது. இதனால் பிரேசிலில் 60 மில்லியன் மக்களும் பராகுவேயில் 7 மில்லியன் மக்களும் மின்சாரம் இன்றி தவித்தனர்.

January-February 2008: சீனாவில் உள்ள Chenzhou நகரத்தில் புயல் தாக்கியதால் 4 மில்லியன் மக்கள் இரண்டு வாரம் மின்சாரம் இன்றி தவித்தனர். இதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டவர்களில் 11 தொழிலாளர்கள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

November 2006: ஜெர்மன் பவர் கம்பெனியின் உயர் மின் கடத்தியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் இல் 10 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்.

Aug. 18, 2005: இந்தோனேசிய வில் பவர் கிரிடில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 100 மில்லியன் மக்கள் 5 மணி நேரம் மின்சாரம் இன்றி தவித்தனர்.

July 12, 2004: Greece இல் 7 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்.

Sept. 28, 2003: Switzerland இல் உயர்  மின்கடத்தியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 95% இத்தாலி மின்சாரம் தடைபட்டது. 55 மில்லியன் மக்கள் 18 மணிநேரம் மின்சாரம் இன்றி தவித்தனர்.

Aug. 14, 2003: மத்திய அமெரிக்காவில் மின்கடதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அமெரிக்காவின் 8 மாநிலங்கள் மற்றும் கனடாவில் 50 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்

March 11, 1999: Brazil’s Sao Paulo மாநிலத்தில் துணை மின்நிலையத்தில் மின்னல் தாக்கியதால் 97 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்

March 1989: கனடா மற்றும் அமெரிக்காவின் சிலபகுதிகளில் சூரிய மின்காந்த புயல் தாக்கியதால் 6 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்.

July 13, 1977: நியூயார்க் நகரத்தில் துணை மின் நிலையத்தில் மின்னல் தாக்கியதால் மின்தடை ஏற்பட்டது 8 மில்லியன் மக்கள் 25 மணி நேரம் மின்சாரம் இன்றி தவித்தனர்

Nov. 9, 1965: துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நியூயார்க் நகரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள் மின்தடை ஏற்பட்டது. 25 மில்லியன் மக்கள் 14 மணி நேரம் மின்சாரம் இன்றி தவித்தனர். இதை தழுவி  “Where Were You When the Lights Went Out?” பிரபலமான திரைப்படமும் எடுக்கப்பட்டது.

நன்றி: தினகரன், தினமலர், national post, daily news analysis


2 comments:

POIYAMOZHI.V said...

மின்சாரம் இல்லாமல் போனால் எப்படியெல்லாம் தின் டாட வேண்டி வரும் என்று திண்டாடியவர்களின் படங்களுடன் ஒரு விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்த உங்களுக்கு நன்றி. அரசாங்கத்தை நம்பாமல்மின்சாரத்தை சுயமாக நாம் உற்பத்தி செய்ய முன் வரவேண்டும்.

Arivuvignesh said...

தோழர் பொய்யாமொழி அவர்களின் கருத்துப்படி அனைவரும் அரசாங்கத்தை நம்பாமல் வீட்டுக்கு வீடு மின்சாரத்தை சுயமாக நாம் சூரியமின்சாரம் மூலம் மின்சாரம் உருவாக்கினால் நமது அடிப்படை தேவைக்கு நாமலே மின்சாரம் உருவாக்கலாம். மின் கட்டணமும் குறையும்.
என்றும் உங்கள் அன்புடன்: அறிவுவிக்னேஷ்