Tuesday, August 7, 2012

செவ்வாயில் கால் பதித்த கியூரியாசிட்டி


நாசாவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட "ரோவர்' விண்கலம், எட்டு மாதப் பயணத்துக்கு பின், நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது.
சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த செவ்வாய் கிரகம், பூமியிலிருந்து 57 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. இந்த சிவப்பு நிற கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழல் குறித்து, அமெரிக்காவின் "நாசா' விஞ்ஞானிகள் இது வரை 7 முறை செயற்கை கோள்களை அனுப்பியுள்ளனர்,
 செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக, செவ்வாயில் உயிரினம் வாழ்ந்திருக்கலாம் என்றும் சில தடயங்கள் கிடைத்தன.

இந்த கிரகத்தைப் பற்றி மேலும் ஆராய, கடந்த நவம்பர் மாதம், "ரோவர்' விண்கலம் செலுத்தப்பட்டது; "ரோவர்' விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த, "கியூரியாசிட்டி' என்ற "ரோபோ' வாகனம்,  "பாராசூட்' மூலம் மெதுவாக ஏழு நிமிட முயற்சிக்கு பின், செவ்வாயின் பரப்பைத் தொட்டது.

*ஆறு சக்கரங்களுடன் கூடிய, "கியூரியாசிட்டி' "ரோபோ' வாகனத்தில், செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழல், மண் அமைப்பு உள்ளிட்டவை ஆராயக்கூடிய வசதி உள்ளது.

*செவ்வாயில் பயணம் செய்யும் போது சிதைவுற்றாலோ அல்லது  ரோபோவில் கோளாறுகள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அதை கண்காணிக்க தனி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அவற்றை தானாகவே சரி செய்துகொள்ளும் தன்மையும் கொண்டது.

*செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஓரளவு புரிந்து கொண்ட பின், ஒரு மாதம் கழித்து, செவ்வாயின் மிக பெரிய பள்ளத்தாக்கான "கேலே' பள்ளத்தாக்கில் தரையிறங்கியுள்ள "கியூரியாசிட்டி'  பெரிய டிரில்லர் கொண்டு செவ்வாயின் நிலபரப்பில் துளைஇட்டு அடியில் உள்ள மண்ணை எடுத்து முதலில் ஆய்வுகளை துவங்கும். மண்ணை  ஆராய்ச்சி செய்யும் அணைத்து வசதிகளும் அதில் உள்ளது.

*செவ்வாய் கிரகத்தில் 96 மைல் பரப்பளவில் சுற்றி வந்து, "கியூரியாசிட்டி' ஆய்வுகளைச் செய்யும்.

* புளூடோனியம் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பேட்டரி, இந்த ரோபோவில் உள்ளது.

*கியூரியாசிட்டி அனுப்பும் புகைப்படங்கள் பூமியை வந்தடைய 26 நிமிடங்கள் ஆகும். செவ்வாய் 57 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் ஒளியின் திசைவேகத்தில் அவை வந்தாலே இந்த நேரம் ஆகும். மேலும் கியூரியாசிட்டி 8 மாதம் பயணம் செய்தே செவ்வாயை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது (அடேங்கப்பா!!!!).

*ரோவர் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கும் நிகழ்ச்சி, நியூயார்க்கின், "டைம்ஸ்' சதுக்கத்தில், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது

*250 கோடி டாலர் செலவில் இந்த விண்கலம் தயாரிக்கப்பட்டது, அதாவது ரூ.14 ஆயிரத்து 300 கோடி.

*ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய நாசா விஞ்ஞானிகள் குழுவில் இந்தியர் அமிதாப் கோஷும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும்  கியூரியாசிட்டி எந்த பகுதியில் இறங்க வேண்டும் என்பதை தீர்மானித்தவரும் இவரே.


3 comments:

Vijayan Durai said...

நல்ல பதிவு நன்பா,பல புதிய தகவல்கள் அறிந்து கொண்டேன்... இந்த விண்கலத்தை அனுப்பியவர்களில் இந்தியரின் பங்கு இருப்பது கேட்டு மகிழ்கிறேன் ,இந்தியா பல சாதனையாளர்களை தன் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் வீண் செய்வது குறித்து வருத்தப்படுகிறேன்..

ம.ஞானகுரு said...

இங்குள்ள திறமைசாலிகளை மதிப்பளிக்க வேண்டும், ஊக்கபடுத்த வேண்டும். இல்லையேல் வெளிநாட்டில் சென்று வேலை பார்க்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கூடிகொண்டே தான் இருக்கும்...

அமெரிக்கா மற்றும் எல்லா நாடுகளின் ஒவ்வொரு சாதனையிலும் இந்தியனின் பங்கு இல்லாமல் இல்லை... இதை இந்திய அரசு பார்த்துக்கொண்டு தான் இருக்கிறதே தவிர எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை...

Pandiaraj Jebarathinam said...

நம்மவர்கள் ரூ 17 ஆயிரம் கோடி கொள்ளை அடிபார்களே தவிர. அந்த ரூ-வை கொண்டு விஞ்ஞானம் வளர வழி செய்ய மாட்டார்கள்....