Saturday, September 22, 2012

விஞ்ஞானமும் மெய்ஞானமும்


விஞ்ஞானம்:
           ஜெனிவா, ஃப்ரான்ஸ் எல்லைப்பகுதியில் 27 கி.மீ சுற்றளவில் லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் என்ற துகள் முடக்கி சோதனைச்சாலை அமைந்துள்ளது. இதில் அணுவின் அடிப்படை துகள்களை (ப்ரோட்டான் => குவார்க் => க்ளுவான்) கட்டமைக்கும் “பரமாணு அதாவது கடவுள் துகள் Higgs boson எது? என்பதை கண்டறிய சோதனை பல ஆண்டுகளாக நடந்து வருகின்றது.

லார்ஜ் ஹாட்ரான் கொலைடரில் அணுவின் அடிப்படைத்துகளான ப்ரோட்டான்களை (நேர்மங்களை) கிட்டதட்ட ஒளியின் வேகத்தில் (வினாடிக்கு 300000கி.மீ) ஒன்றோடொன்று மோதவிட்டு, பிறகு வெளிப்படும் துகள்களில் “அணுவின் அடிப்படைத் துகள்களையே (ப்ரோட்டான் => குவார்க் => க்ளுவான்) கட்டமைக்கும் பரமாணு அதாவது கடவுள் துகள் (Higgs boson) ஏதேனும் வெளிப்படுகின்றதா என்று சோதனை செய்யப்பட்டு சமீபத்தில் அதற்க்கு வெற்றியும் கண்டனர் என்பது அனைவரும் அறிந்ததே

ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் இது பற்றிய குறிப்பு எழுதி உள்ளார் அதை நீங்களே பாருங்கள்.

மெய்ஞ்ஞானம்:

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே. - திருமந்திரம்-2008

விளக்கம்:
அணுவுக்கும் அணுவான அடிப்படைத் துகள்களை (ப்ரோட்டான் => குவார்க் => க்ளுவான்) ஆயிரம் துண்டாக்கி, அதில் ஒரு துண்டுக்குள், நுண்ணியதாக உள்ள பரமாணு நெருங்க கூடியவர்களுக்கு; பரம்பொருளை அடைதலும் கைகூடும்.

என்ன வியப்பாக உள்ளதா லட்சகணக்கான கோடிகள் செலவு செய்து இன்றைய தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்து கூறிய கூற்றை திருமந்திரம் என்றோ கூறிவிட்டது

என்னை பொறுத்த வரை நம்முடைய பழைய இதிகாசங்களையும், நூல்களையும் வெறும் பயத்தோடும், பக்தியோடு மட்டும் பார்க்காமல் அறிவியல் ரீதியாக பார்த்தோமானால் இன்னும் பல விந்தைகள் வெளி வரும்

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

அறிவியலில் அதிக ஆர்வம் உள்ள மாணவனாக சில கேள்விகள்

(1). இத்திருமந்திரத்தையே கிரேக்கர், எகிப்தியர், ரோமாணியர் போன்றோர் எழுதியிருந்தால் தங்களின் நிலைப்பாடு என்னவாகியிருந்திருக்கும்?

(2). ஒரு தமிழர் தமிழில் எழுதிருந்தால் அதில் அறிவியல் கருத்துக்கள் இருக்காதா?

(3). ஆன்மீகத்தில் அறிவியலும், அறிவியலில் ஆன்மீக கருத்துகளும் பிரதிபளிக்கும் நிகழ்வுகள் இருந்தால் ஏற்றுக்கொள்ளக்கூடாதா?

(4). திருமூலர் இதை நிரூபித்து எழுதினாரா? என்றால் கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical Physics) எதையும் அவ்வளவு சீக்கிரத்தில் அதி உயர் கணினியில் (Super Computer) கூட நிருபிக்க முடியாது என்பதே உண்மை. (எ.கா) அற்புதமான இயற்பியலாளர் ஐன்ஸ்டீன் சிறப்பு சார்பியல் கொள்கை (Special Theory of Relativity), பொது சார்பியல் கொள்கைகளை (General Theory of Relativity) சோதனை செய்து கண்டுபிடிக்கவில்லை காரண காரியங்களை வைத்தே கண்டுபிடித்தார். திருமூலர் போன்ற சித்தர்கள் மிகச்சிறந்த சிந்தனையாளர்களாக மட்டுமல்லாமல் நம்மை விட பல பல மடங்கு மூடநம்பிக்கைகளை எதிர்த்தார்கள் என்பதே உண்மை. ஆனால் அவர்கள் கூறியதை ஒரு மூடநம்பிக்கையாக பார்க்கும் நாம் தான் மூடநம்பிக்கைவாதிகள்

திரு.சுகி சிவத்தின் விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒலி நாடா வாங்கி கேளுங்கள் நண்பர்களே நாம் இன்று செய்துவரும் பல பழமையான விசயங்களுக்கான அறிவியல் உண்மைகள் என்ன என தெளிவாக குறிப்பிட்டிருப்பார்.

 இணையத்தில் oruwebsite.com   இல் இந்த பேச்சு உள்ளது ஆனால் பேச்சு முழுமையாக இல்லை.


நன்றி!!!
ம.ஞானகுரு

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வியப்பாக உள்ளது... திரு.சுகி சிவத்தின் விஞ்ஞானமும் மெய்ஞானமும் - வேறு ஒரு தளத்தில் படித்தேன் (கேட்டேன்)... தளம் (URL) ஞாபகம் வரவில்லை...

பகிர்வுக்கு மிக்க நன்றி...

Thozhirkalam Channel said...

தமிழன் என்பதில் பெருமையாக உள்ளது...

ஆனால் நம்மில் சிலபேர் நம்மிடம் உள்ள பெருமைகளை அறியாமல் மற்றவர்களின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறோம்...

முதலில் நம் பெருமையை உணர்ந்துகொள்வோம்..

சூப்பர்ப்பா..

Unknown said...

SUPER FRIEND I BELIVE IT . I WANT TO KNOW HOW PRODUCE THE GOLD.BECAUSE, ALREADY TAMILAN ONLY FIND HOW TO PRODUCE IT.VALLALAR WROTE IN HIS BOOK I SAW IT .THAT IS ALSO SCIENCE BECAUSE I TOLD TO YOU

isgokulkumar said...

நம்மையும் தாழ்த்தி நம்முடைய முன்னோர்களையும் தாழ்த்தி மதிப்பிட்டு கொண்டிருக்கிறோம்.
எல்லோருக்கும் முன்னோடியாக பல கண்டுபிடிப்புகளையும். பல சாதனைகளையும் நம் முன்னோர்கள் நிகழ்த்தி இருக்கிறார்கள்.
அதற்கு இது ஒரு சான்று.

இராஜராஜேஸ்வரி said...

சித்தர்களின் சிந்தனைகளை மூடநம்பிக்கையாக பார்க்கும் நாம் தான் மூடநம்பிக்கைவாதிகள் ..

Amarnath G said...

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா....ஆனால் அவர்கள் கூறியதை ஒரு மூடநம்பிக்கையாக பார்க்கும் நாம் தான் மூடநம்பிக்கைவாதிகள்..nandri thozha

Unknown said...

🙏🌸🌸🙏

oakleeabbas said...

Harrah's Casino Atlantic City, NJ - Mapyro
Harrah's Atlantic City, 포항 출장안마 NJ. 광주광역 출장마사지 Map. Harrah's Atlantic 평택 출장마사지 City. 2131 S. Main 통영 출장안마 St. Atlantic City, NJ 08401. Call Now. Map 사천 출장안마 icon. 777 Harrah's Blvd. Atlantic City,