Saturday, January 21, 2012

தொலை நோக்கி (telescope)



                    தொலை நோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தான் மனிதன் விண்வெளியைப் பற்றி நிறைய தகவல்களை அறியஆரம்பித்தான். தொலை நோக்கி 1609 ஆம் ஆண்டு கலிலியோ என்ற இத்தாலிய வானியல் வல்லுனரால் கண்டுபிடிக்கப்பட்டது. தொலைநோக்கி (Telescope) என்பது வேறு ஒன்றும் இல்லை. அது நம்முடைய கண்ணைப் போல ஒரு பெரிய அளவான கண் அவ்வளவுதான்.

நம் மனித கண்ணின் மணியை (Pupil) விட பல மடங்கு பெரியதாக இருப்பதால், அது தன்னுடைய மிக அதிகமான பரப்பளவில் ஒளியை வாங்கி அதை ஒரே இடத்தில் குவிக்கிறது. அப்போது இந்தப் பொருள் நம் கண்ணால் காண்பதை விடளவும் மிகப் பிரகாசமாகத் தெரிகிறது. நாம் வெறுங்கண்ணால் பார்க்கும் போது விண் வெளியில் வெறும் 6000 விண்மீன்களைத்தான் காண முடிகிறது. தொலைநோக்கி என்பது ஒரு பொருளிலிருந்து போதுமான அளவு ஒளியை சேகரித்து அதை குவிப்பதால், நம் கண்களுக்குத் தெரியாத மங்கலான விண்மீன்களைக் கூட தொலை நோக்கி காட்டி விடுகிறது.

கலிலியோ 1609 ஆம் ஆண்டு முதன் முதலில் தான் கண்டுபிடித்த தொலைநோக்கியின் மூலமாக வானத்தைப் பார்த்த போது விண்ணில் மனிதனின் கண்களுக்குப் புலப்படாத, மங்கலான விண்மீன்களைக் கண்டு வியப்படைந்தார். சர் ஐசக் நியூட்டன் என்ற ஆங்கில விஞ்ஞானி ஒளியை வெவ்வேறு நிறங்களாக முப்பட்டகக் கண்ணாடி (Prism) வழியாக செலுத்திப் பிரித்துக் காட்டினார். அவர் சூரிய ஒளிக் கதிரை கண்ணாடியாலான முப்பட்டகக் கண்ணாடி வழியாக (முக்கோணம் போன்ற வடிவமுடையது) செலுத்திய போது, அந்த ஒளியானது சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் ஊதா என்கிற ஒளிப்பட்டைகளாகப் பிரிந்ததைக் கண்டார்.

அதாவது நாம் காணும் சூரிய ஒளி என்பது தூய்மையான வெந்நிற ஒளி (White Light) அல்ல, அது பல விதமான ஒளிக்கதிர்களின் மொத்தக் கலவை தான் என்று நியூட்டன் நிரூபணம் செய்தார். இந்த ஒவ்வொரு ஒளிக்கதிரும் குறிப்பிட்ட அலை நீளத்தைக் (Wave Length) கொண்ட அலைகளாக உள்ளன. முப்பட்டகக் கண்ணாடி என்பது எல்லா நிறங்களும் கலந்து ஒன்றான வெண்மை நிற ஒளியை அதன் தனித்தனியான நிறங்களாகப் பிரிக்கிறது.

Wednesday, January 18, 2012

விண்வெளியிலிருந்து மின்சாரம்(space electricity)

வானத்துல இருந்து கரன்ட் சப்ளை

எறிபொருள் தட்டுப்பாடு, சுற்று சூழல் பாதிப்பு, அணுக்கதிர் வீச்சு போன்ற பல பிரச்சனைகளை கொண்ட அணு, அனல் மின்சாரத்துக்கு மாற்றாக வானத்துல இருந்து கரன்ட் சப்ளை பெற விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்

மேலும், ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் நடந்த விபத்து போல எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க, விண்வெளியில் உற்பத்தி செய்யப்படும் சூரிய சக்தி மின்சாரத்தை, செயற்கைகோள் மூலமாக பூமியின் எந்த பகுதிக்கும் சப்ளை செய்ய முடியும் என விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமி ஏற்பட்டபோது புகுஷிமா நகரில் மின் இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. அணுமின் நிலையத்தின் ஜெனெரேட்டர்கள் பாதிப்படைந்ததால், அணு உலையை குளிர்விக்க முடியவில்லை. இதனால் அணு உலை வெப்பமடைந்து அணுகதிர் வீச்சை ஏற்படுத்தியது.
விண்வெளியில் சூரிய வெளிச்சம் 24 மணி நேரமும் இருக்கும், பூம¤யில் நிலவும் சூரியனின் வெப்ப நிலையைவிட, விண்வெளியில் 7 மடங்கு அதிகமாக இருக்கும். சோலார் தகடுகளை பயன்படுத்தி அங்கு எளிதில் மின் உற்பத்தி செய்யலாம். அந்த மின்சாரத்தை மைக்ரோ வேவ் ஒளிக்கற்றையாகவோ, அல்லது லேசர் லைட் ஒளிக்கற்றையாகவோ மாற்றி ரிசீவர் மூலமாக பூமியின் எந்த பகுதிக்கும் எமர்ஜென்சியாக சப்ளை செய்ய முடியும்.



இதற்கு பிரத்யேக செயற்கைகோள் மற்றும் ரிசீவர் தேவை. ஒரு செயற்கைகோள் ஆசியாவின் பெரும் பகுதிக்கு மின் சப்ளை செய்துவிடும். மூன்று செயற்கை கோள்களை பயன்படுத்தினால், உலகம் முழுவதும் எந்த பகுதிக்கும் மின் சப்ளை செய்யலாம். எந்த பகுதிக்கு மின்சாரம் தேவையோ, அங்கு 5 முதல் 20 டன் எடையுள்ள ரிசீவர் கருவியை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு சென்று அதை 50 முதல் 100 அடி அகலமுள்ள திறந்தவெளி இடத்தில் வைக்க வேண்டும்.


இதன் மூலம் ஒரு மெகா வாட்டுக்கு அதிகமான மின்சாரத்தை விண்ணிலிருந்து எமர்ஜென்சியாக சப்ளை செய்யலாம். இதனால் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் 6 மணி நேரத்துக்குள் மின் சப்ளை கொடுக்க முடியும். நடைமுறையில் உள்ள நிலக்கரி மின்சாரம், அணு மின்சாரத்துக்கு மாற்றாக விண்வெளி சூரிய சக்தி மின்சக்தி உற்பத்தி செய்யலாம். ஆனால் சோலார் தகடுகளையும், செயற்கைகோளையும் விண்ணுக்கு அனுப்பும் செலவு மிக அதிகமாக இருக்கும்.
டாக்டர் அப்துல்கலாம் கூட சென்ற வாரம் சென்னை அண்ணா பல்கலை கழகத்தைல் இதை பற்றை உரையாற்றைனார்

Tuesday, January 10, 2012

விண்வெளியில் காந்த குடை விரிக்க சூப்பர் திட்டம்!

செயலிழந்த செயற்கை கோள்கள், விண்கலங்களில் இருந்து வெளியேறிய பொருட்கள், சிறிய நட், போல்ட் என்று 22 ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்களில் விண்வெளியில் மிதக்கின்றன. இவற்றால் செயற்கை கோள்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

விண்வெளியில் சுற்றும் செயற்கை கோள்கள், தேவையற்ற பொருட்கள் தொடர்பாக அமெரிக்காவின் தேசிய ஆய்வு கவுன்சில் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டது. இதில் தெரியவந்த தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: உலகின் பல நாடுகளும் பல ஆண்டுகளாக விண்ணில் செயற்கை கோள்களை செலுத்தி வருகின்றன. இவை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு செயலிழக்கின்றன. ஆனாலும், தொடர்ந்து விண்வெளியில் மிதந்து வருகின்றன. இதுதவிர, விண்வெளியில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்போதும் குப்பைகளாக பல பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன.

இது மட்டுமின்றி விண்கலங்கள் மற்றும் செயற்கை கோள்களில் இருந்து எதிர்பாராதவிதமாக விலகும் நட், போல்ட், டூல்ஸ் போன்றவையும் விண்வெளியில் சுற்றி வருகின்றன. சிறிதும் பெரிதுமாக இவ்வாறு 22 ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்கள் பூமிக்கு அருகில் விண்வெளியில் சுற்றி வருகின்றன. செயலிழந்த செயற்கை கோள் ஒன்றை தகர்த்து அழிக்கும் முயற்சி 2007-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. ஏவுகணை போன்ற ஆயுதத்தால் மோதி அழிக்கப்பட்டது.

அது 1.50 லட்சம் பீஸ்களாக உடைந்து விண்வெளியில் மிதந்தது. 2009-ல் இரு செயற்கை கோள்கள் எதிர்பாராவிதமாக மோதிக் கொண்டன. அதனாலும் குப்பை எண்ணிக்கை அதிகரித்தது. இந்த விண்வெளி குப்பைகள் மணிக்கு 28 ஆயிரம் கி.மீ. வேகத்தில் சுற்றி வருகின்றன. தற்போது செயல்பாட்டில் இருக்கும் செயற்கை கோள்கள், விண்கலங்கள் ஆகியவற்றின் மீது இவை மோதினால் பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் ஆபத்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விண்வெளி குப்பைகளை பத்திரமாக அகற்றுவது தொடர்பாகவும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. தூண்டில், வலை போன்ற கருவிகளை வைத்து அவற்றை அகற்றலாம் என்று விஞ்ஞானிகள் பரிந்துரை செய்துள்ளனர். காந்த சக்தி கொண்ட பிரமாண்ட குடை மூலமாக அப்பொருட்களை கவர்ந்திழுக்கலாம் என்ற யோசனையும் கூறப்பட்டுள்ளது