Wednesday, January 18, 2012

விண்வெளியிலிருந்து மின்சாரம்(space electricity)

வானத்துல இருந்து கரன்ட் சப்ளை

எறிபொருள் தட்டுப்பாடு, சுற்று சூழல் பாதிப்பு, அணுக்கதிர் வீச்சு போன்ற பல பிரச்சனைகளை கொண்ட அணு, அனல் மின்சாரத்துக்கு மாற்றாக வானத்துல இருந்து கரன்ட் சப்ளை பெற விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்

மேலும், ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் நடந்த விபத்து போல எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க, விண்வெளியில் உற்பத்தி செய்யப்படும் சூரிய சக்தி மின்சாரத்தை, செயற்கைகோள் மூலமாக பூமியின் எந்த பகுதிக்கும் சப்ளை செய்ய முடியும் என விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமி ஏற்பட்டபோது புகுஷிமா நகரில் மின் இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. அணுமின் நிலையத்தின் ஜெனெரேட்டர்கள் பாதிப்படைந்ததால், அணு உலையை குளிர்விக்க முடியவில்லை. இதனால் அணு உலை வெப்பமடைந்து அணுகதிர் வீச்சை ஏற்படுத்தியது.
விண்வெளியில் சூரிய வெளிச்சம் 24 மணி நேரமும் இருக்கும், பூம¤யில் நிலவும் சூரியனின் வெப்ப நிலையைவிட, விண்வெளியில் 7 மடங்கு அதிகமாக இருக்கும். சோலார் தகடுகளை பயன்படுத்தி அங்கு எளிதில் மின் உற்பத்தி செய்யலாம். அந்த மின்சாரத்தை மைக்ரோ வேவ் ஒளிக்கற்றையாகவோ, அல்லது லேசர் லைட் ஒளிக்கற்றையாகவோ மாற்றி ரிசீவர் மூலமாக பூமியின் எந்த பகுதிக்கும் எமர்ஜென்சியாக சப்ளை செய்ய முடியும்.



இதற்கு பிரத்யேக செயற்கைகோள் மற்றும் ரிசீவர் தேவை. ஒரு செயற்கைகோள் ஆசியாவின் பெரும் பகுதிக்கு மின் சப்ளை செய்துவிடும். மூன்று செயற்கை கோள்களை பயன்படுத்தினால், உலகம் முழுவதும் எந்த பகுதிக்கும் மின் சப்ளை செய்யலாம். எந்த பகுதிக்கு மின்சாரம் தேவையோ, அங்கு 5 முதல் 20 டன் எடையுள்ள ரிசீவர் கருவியை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு சென்று அதை 50 முதல் 100 அடி அகலமுள்ள திறந்தவெளி இடத்தில் வைக்க வேண்டும்.


இதன் மூலம் ஒரு மெகா வாட்டுக்கு அதிகமான மின்சாரத்தை விண்ணிலிருந்து எமர்ஜென்சியாக சப்ளை செய்யலாம். இதனால் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் 6 மணி நேரத்துக்குள் மின் சப்ளை கொடுக்க முடியும். நடைமுறையில் உள்ள நிலக்கரி மின்சாரம், அணு மின்சாரத்துக்கு மாற்றாக விண்வெளி சூரிய சக்தி மின்சக்தி உற்பத்தி செய்யலாம். ஆனால் சோலார் தகடுகளையும், செயற்கைகோளையும் விண்ணுக்கு அனுப்பும் செலவு மிக அதிகமாக இருக்கும்.
டாக்டர் அப்துல்கலாம் கூட சென்ற வாரம் சென்னை அண்ணா பல்கலை கழகத்தைல் இதை பற்றை உரையாற்றைனார்

0 comments: